கலைக்களஞ்சியம்/அமீன் தீவுகள்
அமீன் தீவுகள் இலட்சத் தீவுகளில் வடக்குத் தொகுதியைச் சேர்ந்த ஐந்து தீவுகள், இவை கொங்கணக் கடற்கரையிலிருந்து மேற்கே சுமார் 200 மைல் தொலைவில் உள்ளன. இவை கடலின் கீழுள்ள பவளத்திட்டு ஒன்றன்மேல் அமைந்துள்ளன. இத் தீவுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள். மிகப் பெரும்பான்மையோர் பேசும் மொழி மலையாளம். தென்னைச் சாகுபடியும், நார் உற்பத்தியும் இங்கு நடைபெறும் முக்கியமான தொழில்கள். இவை தென் கன்னட மாவட்டத்தின் நிருவாகத்தில் உள்ளன. பரப்பு : 3 சதுர மைல். மக்: 7:043 (1951).