கலைக்களஞ்சியம்/அமீர் குஸ்ரு
அமீர் குஸ்ரு (?- 1325) : இவர் அல்லாவுதீன் கில்ஜி, சியாசுதீன் துக்ளக் முதலிய முகம்மதிய மன்னர்கள் காலத்தில் டெல்லி சுல்தானுடைய அவைப்புலவராக இருந்த ஓர் அறிஞர். இவர் இயற்றியுள்ள துக்ளக் நாமா என்னும் நூலில் அக்காலத்திய மன்னர்களைப் பற்றிய வரலாறு காணப்படுகிறது. கியாசுதீனைப் பற்றி இந்நூல் புகழ்ந்து கூறுகின்றது. இவர் ஒரு முறை மொகலாயர்களால் சிறைப்படுத்தப்பட் டிருந்தார் ; அவர்களைப்பற்றி இவர் விவரித்துக் கூறியுள்ளது இவரது வருணனைத் திறனைக் காட்டுகிறது. இவர் ஏறத்தாழ 14 பாரசீகச் செய்யுள் நூல்களை இயற்றி யுள்ளார். இந்தியாவிலிருந்த பாரசீக மொழிப் புலவர் களில் இவரே தலைசிறந்தவர் எனலாம். தே. வெ. ம.