கலைக்களஞ்சியம்/அயனம்

அயனம்: பூமி சூரியனைச் சுற்றி ஓர் ஆண்டில் ஒருமுறை வருவதால், பூமியிலுள்ளவர்க்குச் சூரியன் நட்சத்திர மண்டலங்களிடை நகர்ந்து செல்வதுபோல் தோன்றுகிறது. சூரியனின் இப்படிப்பட்ட ஆண்டுச் சஞ்சாரத்தில் தை மாதம் முதல் 6 மாதங்கள் வட துருவத்தை நோக்கி நிகர்வதும்,ஆடி முதல் 6 மாதங்கள் தெற்கே நோக்கிச் செல்வதும், பூமியின் சீதோஷ்ண நிலை வருடாந்தர மாறுதல்களடைவதும் பலரும் கண்டறிந்தவை. கடக ரேகையிலிருந்து தெற்கே திரும்பும் காலம் தட்சிணாயனம் என்றும், மகர ரேகையிலிருந்து வடக்கே திரும்பும் காலம் உத்தராயனம் என்றும் கூறுவர். அயன தினங்கள் சூரியன் வட, தென் சஞ்சாரத்தில் திசை மாறும் காலங்களாகும். மேனாட்டுப் பஞ்சாங்கப்படி தட்சிணாயன தினம் ஜூன் 21லும், உத்தராயன தினம் டிசம்பர் 22லும் ஏற்படுகின்றன. உத்தராயன தினத்தன்று பூமியின் வடபாகத்திலுள்ளவர்க்கு ஓர் ஆண்டில் மிக நீண்ட பகற்பொழுதும் தென்பாகத்திலுள்ளவர்க்கு மிகக்குறைந்த பகற்பொழுதும் இருக்கும். தட்சிணாயன தினத்தன்று பகற்பொழுது இதற்கு நேர்மாறாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அயனம்&oldid=1501702" இலிருந்து மீள்விக்கப்பட்டது