கலைக்களஞ்சியம்/அயவா

அயவா (Iowa) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்று. காலிபோர்னியாவுக்கும் மசசூசிட்ஸுக்கும் இடையிலுள்ளது. பரப்பு : 56,045 ச.மைல். முக்கிய ஆறுகள் டமாய்ன், அயவா. முக்கிய ஏரிகள் கிளியர், ஸ்பிரிட், ஸ்டார்ம். மரங்களைத் தொடர்ந்து வெட்டி வருவதால் காடுகள் அழிந்து வருகின்றன. தானியமும் கால்நடையும் மிகுதி. தேன் உண்டாக்குவதில் நான்காவது மாகாணமா யிருக்கிறது. இந்த இராச்சியத்தில் விவசாயமே முக்கியமானது. இராச்சியத்தின் பரப்பில் சுமார் மூன்றிலொரு பங்கில் தரையடியில் நிலக்கரி உள்ளது. ஒரு காலத்தில் காரீயச் சுரங்கங்கள் முக்கியமாக இருந்தன. மக்: 2,621,073 (1950). தலைநகரம் டமாய்ன். இந்த இராச்சியத்தின் முக்கிய கைத்தொழில் இறைச்சியை டப்பிகளில் அடைத்தல். உணவுச் செய்முறைத் தொழிலும் முக்கியமானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அயவா&oldid=1455420" இலிருந்து மீள்விக்கப்பட்டது