கலைக்களஞ்சியம்/அரங்கநாத முதலியார், பூண்டி

அரங்கநாத முதலியார், பூண்டி(1844-1893) தொண்டை நாட்டில் திருவள்ளூரையடுத்த பூண்டியிற் பிறந்தவர். தந்தையார் சுப்பராய முதலியார்; சைவ வேளாளர். சென்னைப் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியிலும் அரசினர் கல்லூரியிலும் கற்றுக் கணிதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்; மிகச் சிறந்த மேதையுள்ளவர்; வியக்கத்தக்க நினைவாற்றலுள்ளவர்; கும்பகோணம் கல்லூரியிலும் சென்னை அரசாங்கக் கல்லூரியிலும் பேராசிரியராக இருந்தார்; பல்கலை வல்லவர் எனப் பாராட்டப் பெற்றவர்; சிறந்த இனிய சொற்பொழிவாற்றுவதில் வல்லவர்; தொழுவூர் வேலாயுத முதலியார், திருமணம் செல்வக்கேசவராய முதலியாரவர்களின் தந்தையாரான சுப்பராய முதலியார் ஆகியோரிடம் தமிழ் கற்றுச் சிறந்தார்; கச்சிக்கலம்பகம் என்னும் நூலை யியற்றினார்.

கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக இருந்தாலும், எல்லாத் துறையிலும் சிறப்புற்று விளங்கினார். இவர் காலத்தில்

பூண்டி அரங்கநாத முதலியார்
உதவி: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

உயர் நீதிமன் றத்திலே தலைவராக இருந்த திருவாரூர் முத்துசாமி ஐயரவர்களும் வியக்கும்படி சிக்கலான ஒரு வழக்கை ஒரு நள்ளிரவிலேயே படித்து விட்டுத் தீர்ப்பெழுதிக் கொடுத்தார். சென்னை உயர்நீதி மன்றத்திலே முதன் முதல் ஷெரீப் ஆக நியமிக்கப்பட்ட இந்தியர் இவரே. கல்வி, பூண்டி அங்கநாத முதலியார் சமூகச் சீர்திருத்தம், பெண்கள் முன்னேற்றம் அரசியல் முதலியவற்றைப் பற்றி இவர் முக்கால் நூற்றாண்டுக்குமுன், கட்டுரைகளின் மூலமாகவும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் வெளியிட்ட அரிய கருத்துக்கள் இன்றும் சிறந்தனவாகவே இருக்கின்றன.