கலைக்களஞ்சியம்/அரக்கோணம்

அரக்கோணம் வட ஆர்க்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டத்திலுள்ள ஒரு பட்டணம்; முக்கியமான ரெயில்வே சந்திப்பு. இதன் அருகிலுள்ள தக்கோலத்தில் நடைபெற்ற போரில் ராஜாதித்திய சோழன் கி.பி. 949-ல் இறந்தான் என்று கூறுவர்.