கலைக்களஞ்சியம்/அலியூஷன் தீவுகள்
அலியூஷன் தீவுகள்: அலாஸ்கா தீபகற்பத்தின் தென் பகுதியிலிருந்து கொடுவாள் போல் வளைந்து நீண்டு இருக்கும் தீவுக்கூட்டம். அலாஸ்காவைச் சேர்ந்த இக்கூட்டம் சுமார் 1,000 மைலுக்கு நீண்டிருக்கிறது. இத்தீவுகளின் மொத்தப் பரப்பு : 6,400 ச.
மைல். இங்குள்ள மக்களுக்கு அலூட் என்று பெயர். மீன் பிடிப்பது இவர்கள் தொழில். மக்: சு. 1,200. இவற்றில் உனலாஸ்கா என்பது மிகப் பெரிய தீவு. இரண்டாம் உலக யுத்தத்தின்போது 1941-1943-ல் இத்தீவுகள் ஜப்பானியர் வசம் இருந்தன.