கலைக்களஞ்சியம்/அஷகாரி

அஷகாரி (Echegaray Jose, 1832-1916)19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த நாடகாசிரியர். இவர் பொறியியலும் கணிதமும் கைவந்தவர். சமூக விஷயங்களைப்பற்றி நாடகங்கள் இயற்றினார். 1904-ல் நோபெல் இலக்கியப்பரிசு பெற்றார். இவருடைய உலகமும் அவருடைய மனைவியும் (The World and His Wife) என்னும் நாடகம் பெரும்புகழ் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அஷகாரி&oldid=1455969" இலிருந்து மீள்விக்கப்பட்டது