கலைக்களஞ்சியம்/அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்

458682கலைக்களஞ்சியம், தொகுதி 1 — அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்

அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் சென்னைச் சூளையில் இருந்த புலவர்; விநோதரசமஞ்சரி ஆசிரியர் ; பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர். விநோதரசமஞ்சரி இடைக்கால உரைநடைக்கு ஒரு சான்று. பல புலவர்களைப்பற்றிய கர்ணபரம்பரைக் கதைகளைத் தொகுத்தெழுதியது.