கலைக்களஞ்சியம்/அஸ்டிரக்கான்

அஸ்டிரக்கான் (Astrakhan) கிழக்கு ரஷ்யாவில் வால்கா நதியிலுள்ள ஒரு பெரிய தீவில் அமைந்துள்ள நகரம். பண்டை நாளில் தார்த்தார் இராச்சியத்தின் தலைநகராயிருந்து 1395-ல் தைமூரால் அழிக்கப்பட்டது. இப்போதுள்ளது 1558-ல் உண்டாக்கப்பெற்றது. இது ஒரு முக்கியமான வியாபாரத்தலம். பெரும்பாலும் இங்கிருந்துதான் காஸ்பியன் கடலில் பிடிக்கும் மீன் முழுவதும் சோவியத் நாட்டின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மக் : 2,54,000 (1939).