கலைக்களஞ்சியம்/அஸ்தினாபுரி

அஸ்தினாபுரி உத்திரப் பிரதேசத்திலுள்ள மீரட்டிற்கு வடகிழக்கே சு. 20 மைல் தொலைவில் உள்ள ஒரு பண்டைய ஊர். கௌரவர்களுடைய தலைநகரமாயிருந்தது என்பர். அஸ்தின் என்னும் அரசன் நிருமாணித்ததால் இப்பெயர் பெற்றது என்ப. யானைகள் (அஸ்திகள்) மிகுந்திருந்தமையால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.