கலைக்களஞ்சியம்/ஆங்கோர்

ஆங்கோர் ஆசியாவில் கம்போடியா நாட்டின் பழைய தலைநகரம்; இப்பொழுது சிதைந்து கிடக்கிறது. இதைச் சூழ்ந்து உயரமான சுவர்கள் உள்ளன. இதன் பரப்பு ஏறக்குறைய இரண்டு சதுர மைல். இதற்கு ஐந்து வாயில்கள் உள்ளன. இதிலுள்ள அரண்மனைகள் தென்ஹா என்னும்கம்போடியாசுதந்திரம் பெற்றஆறாம் நூற்றாண்டில் இந்துச் சிற்ப முறையைத் தழுவிக் கட்டப் பெற்றவை. இங்கு வாழ்ந்த மக்கள் கெமர் (Khmer) நாகரிகத்தினர் எனப்பெறுவர். தலைநகரத்தை ஆங்கோர்தோம் என்றும், அதன் தெற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள பௌத்தக் கோயிலை ஆங்கோர்வாட் என்றும் கூறுவர். இந்த நகரத்தைத் தாய்லாந்து மன்னனுடைய சேனைகள் 1431-ல் அழித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆங்கோர்&oldid=1456364" இலிருந்து மீள்விக்கப்பட்டது