கலைக்களஞ்சியம்/ஆங்கோர்வாட்

ஆங்கோர்வாட் (Angkor Vat) கம்போடியாவிலுள்ள ஊர். இங்கே கெமர் கலையின் விரிவைக் காணலாம். கி. பி. 12ஆம் நூற்றாண்டில் சூரியவர்மன் கட்டிய பெரிய கோயில் கெமர் கலையில் ஒரு மணி போன்றதாகும். இதன் அணியிட்ட கைப்பிடிச் சுவர்களுக்கும் கோபுரங்களுக்கும் இணையாக இந்து இதிகாசக் கதைகளைச் சித்திரிக்கும் வேலைப்பாடுகள் உடைய நீண்ட பிரகாரங்களையே கூறலாம். இங்கே இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களின் கதைகள் எல்லாம் சித்திரிக்கப்பட்டிருப்பதோடு அக்காலத்து அரசிகளுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. இந்தச் சித்திரங்கள் உயிருடனுள்ளவைபோலவே காணப்படுகின்றன. சீ. சி.