கலைக்களஞ்சியம்/ஆசூர்பானிபல்
ஆசூர்பானிபல் (கி. மு. 669-626) அசீரியர்களுடைய கடைசிப் பேரரசன் ; இவன் காலத்தில் அசீரியர்களுடைய புகழ் உலகெங்கும் பரவியது. இவன் எகிப்து, பாபிலோன், ஈலம் முதலிய நாடுகளை வென்றான். ஆயினும் இப்போர்களால் பலவீனமடைந்த அசீரியாவைப் பிற்காலத்தில் பிற நாட்டவர்கள் வெல்வது எளிதாயிற்று. இவன் இறந்து 14 ஆண்டுகட்குப் பிறகு அசீரிய சாம்ராச்சியம் முடிவு எய்தியது. இவனுக்கு இலக்கியத்திலும் கலைகளிலும் ஆர்வம் உண்டு. இவனது தலைநகரமான நினேவாவில் பல அழகிய கட்டடங்களைக் கட்டுவித்தான். இவன் அரண்மனையில் ஒரு பெரிய நூல் நிலையம் இருந்தது. பண்டைய பேரரசர்களில் இவன் ஒருவன் என்று கூறலாம். தே. வெ. ம.