கலைக்களஞ்சியம்/ஆட்லெஸ்

ஆட்லெஸ் (Atlas) கிரேக்கப் புராணம் கூறும் டைட்டன்கள் என்ற அசுரர்களுள் ஒருவன். இவன் அரக்கருடைய போரில் கலந்து கொண்டதற்காக விண்ணுலகத்தைத் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டிருக்குமாறு இவனுக்குக் கிரேக்கக் கடவுள் ஜூஸ் தண்டனை அளித்தார். இவனே இப்போது ஆப்பிரிக்காவிலுள்ள அட்லாஸ் மலையாக இருப்பதாகக்கூறுவர். இவன் பூமியைத் தாங்குவதான படத்தைப் பிளீமிஷ் பூகோள சாஸ்திரி மெர்க்காட்டர் தமது தேசப்படப் புத்தகத்தில் பொறித்தார். அன்று முதல் தேசப்படப் புத்தகம் ஆட்லெஸ் என்று பெயர் பெறுவதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆட்லெஸ்&oldid=1456495" இலிருந்து மீள்விக்கப்பட்டது