கலைக்களஞ்சியம்/ஆதொண்டை

ஆதொண்டை முள்ளுள்ள கொடி. இந்தியா, இலங்கை, பர்மா முதலிய தேசங்களில் வளர்வது. வேலிகளிலும் தனிமரங்களின் மீதும் படர்ந்திருக்கும். பூத்திருக்கும்போது மிகவும் அழகாகத் தோன்றும். இலை தனியிலை; இலையடிச் செதில் முள்ளாக மாறி இருக்கும். இளம் பாகங்களைத் துருப்போன்ற நிறமுள்ள நுண் மயிர் மூடியிருக்கும். புறவிதழ் 4; அகவிதழ் 4. கேசரம் பல. சூலகம் சூல்காம்பின் முனையிலிருக்கும். கனி சற்று நீண்டு உருண்டிருக்கும். விதைகள் மிகப்பல. சுவர் ஒட்டு முறையில் அமைந்திருக்கும். காயை வற்றல்

ஆதொண்டை

1. கிளையும் பூக்கொத்துக்களும். 2.கனி. 3. பிஞ்சு. குறுக்குவெட்டு, 4. முதிர்ந்தகனி - குறுக்குவெட்டு.

போடுவார்கள். இலையை, வீக்கம், கட்டி, மூலவியாதி முதலியவற்றிற்கு வைத்துக் கட்டுவதுண்டு. வேரின் பட்டை கசப்பானது. உபசமன மருந்தாகவும், அரோ சிக நிவிர்த்தி மருந்தாகவும் பயன்படுகிறது. வாந்தி பேதிக்கும் வேர்ப்பட்டை பயன்படுகிறது. குடும்பம்: கப்பாரிடேசீ ; இனம்: கப்பாரிஸ் சைலானிகா (Capparis zeylanica).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆதொண்டை&oldid=1490588" இலிருந்து மீள்விக்கப்பட்டது