கலைக்களஞ்சியம்/ஆமுண்ட்ஸென்
ஆமுண்ட்ஸென் (1872-1928) : இவர் நார்வே நாட்டவர்; முதன் முதலில் ஆர்க்டிக் சமுத்திரம் வழியே சென்று வடமேற்காக வழியுண்டு என்று கண்டுபிடித்து வடதுருவத்தைச் சுட்டிக்காண்பித்தவர். 1911-ல் இவர் அன்டார்க்டிக் கடலைக் கடந்து முதன் முதலில் தென் துருவத்தை யடைந்தார். 1926-ல் வட துருவத்தின் வழியாக, விமானத்தில் சென்றார். 1928-ல் மீண்டும் அந்தப் பிரதேசத்திற்கு யாத்திரை சென்றார். ஆனால் இவர் ஏறிச் சென்ற விமானம் ஆர்க்டிக் கடலில் எங்கோ அகப்பட்டு அழிந்து போகவே, அதன் பிறகு அவரைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. கே. ஆர். ஸ்ரீ.