கலைக்களஞ்சியம்/ஆயாமா, ஈவாவா
ஆயாமா, ஈவாவா (Oyama, Iwao 1842-1916) ஜப்பானியத் தளகர்த்தர். இவர் சட்சுமா நகரிற் பிறந்தார். 1877-ல் அரசருக்கு எதிராக நடந்த கலகத்தை அடக்க இவர் உதவினார். 1894-ல் சீன-ஜப்பானியப் போர் தொடங்கியதும், இவர் ஒரு சேனையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இச்சேனை போர்ட் ஆர்தர் துறைமுகத்தை வெற்றியுடன் தாக்கி முன்னேறியது. இச்சேவைக்காக இவர் பிரபுவாக்கப்பட்டார். 1904-ல் ரஷ்ய-ஜப்பானியப் போரில் இவர் மஞ்சூரியாவில் ஜப்பானியச் சேனைகளுக்குப் பிரதம தளபதியாக்கப்பட்டார். இதில் இவர் அடைந்த வெற்றியைப் பாராட்டி, ஜப்பானியச் சக்கரவர்த்தி இவரை இளவரசராக்கினார்.