கலைக்களஞ்சியம்/ஆய்க்கன், ருடால்ப் கிறிஸ்டோப்
ஆய்க்கன், ருடால்ப் கிறிஸ்டோப்(Eucken, Rudolph Christoph, 1846-1926) ஜெர்மன் தத்துவ சாஸ்திரி. இவர் முதன் முதல் இயற்றிய தத்துவ சாஸ்திரக் கலைச்சொற்கள் வரலாறு என்னும் நூல் மிக்க பயன் தருவதாகும். அவர் 1908-ல் வாழ்க்கையின் பொருளும் பயனும் என்னும் நூலுக்காக நோபெல் இலக்கியப் பரிசு பெற்றார். அவருடைய நூல்கள் மதப்பற்றுடன் கூடிய மன எழுச்சி உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தவை.