கலைக்களஞ்சியம்/ஆராஸ்

ஆராஸ் பிரான்சின் தலைநகரான பாரிசிற்கு 120 மைல் வடக்கே ஸ்கார்ப் நதிக்கரையில் உள்ள ஊர். இவ்வூர் எழில் மிக்க திரைச்சீலைகளைச் செய்வதில் பெயர் பெற்றது. இதிலிருந்து திரைச்சீலையைக் குறிக்க ஆங்கிலத்தில் ‘ஆராஸ்’ என்னும் பெயரே ஏற்பட்டுவிட்டது. சோளம் இங்குப் பெரிதும் சாகுபடியாகிறது. முதல் உலக யுத்தத்தில் இங்குப் பெரும்போர் நடந்தது. மக் : 33,345 (1946).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆராஸ்&oldid=1506052" இலிருந்து மீள்விக்கப்பட்டது