கலைக்களஞ்சியம்/ஆரியப் படை தந்த நெடுஞ்செழியன்
ஆரியப் படை தந்த நெடுஞ்செழியன் வடநாட்டரசரை வென்றதால் இப்பெயர் பெற்றான். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனவும் பெறுவான். கோவலனைக் கொல்வித்தது தவறு என்று கண்டு அரியணைமீதே உயிர்விட்டதால், 'அரசுகட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்' என்றும் கூறப்படுவான். இவனுடைய கோப்பெருந்தேவியும் உடனே மாய்ந்தனர் (சிலப்.). சேரன் செங்குட்டுவன் காலத்தவன் (புறம்.183).