கலைக்களஞ்சியம்/ஆற்றிப் பதனிடல்
ஆற்றிப் பதனிடல் (Annealing) : உலோகங்கள், கண்ணாடி முதலிய பொருள்களைக் குறிப்பிட்ட ஒரு வெப்ப நிலைக்குச் சூடேற்றிக் குளிர்விப்பதால் அப்பொருள்களின் இயல்புகள் மாறுபடுகின்றன. பொது வாய் இம் முறையால் பொருள்கள் மிருதுவாகவும், எளிதில் நொறுங்காத இயல்புடனும் ஆகும்படி செய்யலாம். கண்ணாடியைப் பதனிடவும் இதையொத்த முறையே வழங்குகிறது. புதிதாகச் செய்யப்பட்ட கண்ணாடிப் பொருள்கள் பெரிய இரும்புத் தட்டுக்களில் வைக்கப் பட்டு, குகை போன்ற அடுப்பின் வழியே மெதுவாக இழுக்கப்படும். அப்போது அவை நன்றாகச் சூடேறிச் சீராகவும் மெதுவாகவும் பதனாகின்றன.