கலைக்களஞ்சியம்/ஆற்றுக்குருவி

ஆற்றுக்குருவி (Tern) ஒரு நீர்ப் பறவை. கடலோரங்களிலும் முகத்துவாரங்களிலும் உள்நாட்டு நீர் நிலைகளிலும் இது காணப்படும். மெலிவான அழகியஉடலும், நீண்ட சிறகுகளுமுள்ள இந்தப் பறவைக்குக் கடல்தகைவிலான் குருவியென்றும், ஆலா என்றும் பெயர். அடிக்கடி தண்ணீருக்குள் மூழ்கி, முழுவதும் மறைந்துபோய்ப் பிறகு வெளியே வரும். மீன், நண்டு, நத்தை, பூச்சி முதலியவற்றைப் பிடித்துத் தின்னும். மனித சஞ்சாரமில்லாத சில தீவுகளில், ஆயிரக்கணக்காக இவை கத் திக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கால் வைக்க இடமில்லாமல் அவ்வளவு நெருக்கமாயிருக்கும்.

இந்தப் பறவைக்கு, நேரான மெலிந்து நீண்ட மஞ்சள் அலகு உண்டு. வால் பிளந்திருக்கும். கால்கள் குட்டையாகவும் சிவப்பாகவுமிருக்கும். தண்ணீருக்கு

ஆற்றுக்குருவி

மேல் இங்கும் அங்கும் பறந்து, அலகைக் கீழ்நோக்கி வைத்துக் கொண்டு, மீன் திரள்கள் வருவதைக் கவனித்துக் கொண்டேயிருந்து, திடீரென்று மூழ்கி மீன்பிடிக்கும். இது மரத்தில் தங்குவதில்லை; தண்ணீரில் இறங்குவதுமில்லை; கரையிவேதான் உட்கார்ந்திருக்கும். முட்டைகளைத் தரையிற் செய்த குழிகளிலிட்டு, நண் பகலில் சூரியவெப்பம் படும்படி விட்டுவிட்டு மீன்பிடிக்கப்போகும். பசுமை கலந்த சாம்பல் நிறமுள்ள, இரண்டு அல்லது மூன்று முட்டைகளிடும். அவைகளில் கருங்கபில நிறப் புள்ளிகள் காணப்படும். ஆற்றுக் குருவிகளில் அநேக வகைகளுண்டு. ஒருவகை ஆற்றுக்குருவி வட துருவத்திலிருந்து, குளிர் காலத்தில் 11,000 மைல் தூரம் தென்துருவஞ் சென்று, காலம் மாறும்போது மறுபடி யும் வடதுருவஞ் சேரும். இப்படி ஒவ்வோராண்டும் அநேக ஆயிரக்கணக்கான மைல்கள் வலசைபோகும் வழக்கம் இந்தப் பறவையிடம் காணும் ஒரு சிறப்பு. பா. பா.