கலைக்களஞ்சியம்/ஆலங்குடி வங்கனார்

ஆலங்குடி வங்கனார் கடைச் சங்கம் மருவிய புலவர். ஆலங்குடி யென்னும் ஊர் பல இருப்பதால் இவரூர் இன்னதென்று துணிய முடியவில்லை. பெரும்பாலும் பரத்தையிற் பிரிவு பற்றிப் பாடியுளர். (குறுந். 8,45; நற்.230,330, 400 ; அகம். 106; புறம். 319; திருவள்ளுவ மாலை 53).