கலைக்களஞ்சியம்/ஆல்காக்கள்

ஆல்காக்கள் குளம், குட்டை, ஆறு, கடல் முதலிய எல்லாவகை நீர்நிலைகளிலும், ஈரமான இடங்களிலும் வளரும் மிக நுண்மையான ஓரணுத் தாவரங்கள். சில நீலப்பச்சை, சில பச்சை, சில பழுப்பு, சில சிவப்பு நிறமாகத் தோன்றும். இவையெல்லாவற்றிலும் பச்சையம் (Chlorophyll) உண்டு. இவை அதன் உதவியால் சூரியவெளிச்சத்தைக் கொண்டு ஒளிச்சேர்க்கையினாலே தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை ஆக்கிக் கொள்ளும் சுதந்திர உயிர் வகைகள். பார்க்க: பாசி.