கலைக்களஞ்சியம்/ஆல்மா ஆட்டா
ஆல்மா ஆட்டா (Alma Ata) சோவியத் ஆசிய ரஷ்யாவைச் சார்ந்த காஜாக் குடியரசின் தலைநகர். லியர்ளி என்பது இந்நகரின் பழைய பெயர். டீன்ஷான் மலையடிவாரத்தில் மரம், செடி, கொடிகள் மிகுந்துள்ள இடத்தில் அமைந்துள்ள இந்நகரத்தில் நெசவுக் கைத்தொழிலும், பழங்களைப் பாதுகாத்துச் சேமிக்கும் கைத்தொழிலும் சிறப்பானவை. மக்:3,30,528 (1939).