கலைக்களஞ்சியம்/ஆழ்வாரப்பப் பிள்ளை
ஆழ்வாரப்பப் பிள்ளை (1839-1924): இவர் முருகதாச சுவாமிகள் எனவும் பெறுவர். திருநெல்வேலி மாவட்டத்தினர். ரெவினியூ இன்ஸ்பெக்டராயிருந்தவர். சைவசிந்தாந்தி. வள்ளியூர்த் தலப்புராணம், வள்ளியூர்க் காவடி வைபவம் (பலவகைச் சந்தங்களால் ஆகியது) என்னும் நூல்களையும் கிருகஸ்த தர்மம் என்னும் கட்டுரை நூலையும் எழுதியிருக்கிறார். அளவற்ற கீர்த்தனைகளையும் இயற்றி யிருக்கிறார்.