கலைக்களஞ்சியம்/ஆவிட்

ஆவிட் (கி.மு.43-கி. பி. 17) அழகான நடைக்கும். இசைமிகுந்த செய்யுளுக்கும் பேர்போன ரோமானியக் கவிஞர். ஆங்கில இலக்கியம் அவரிடம் கற்றுக்கொண்டதுபோல் வேறு எந்த ரோமானியக் கவிஞரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. அவர் ஆதன்ஸில் கல்வி கற்றார். முதலில் ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆதரவு பெற்றபோதிலும், காதற்கலை என்னும் காவியம் எழுதியதற்காக நாடுகடத்தப்பட்டார். அவருடைய கவிதைகள் பெரும்பாலும் காதற்சுவை பற்றியனவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆவிட்&oldid=1458045" இலிருந்து மீள்விக்கப்பட்டது