கலைக்களஞ்சியம்/ஆஸ்லோ
ஆஸ்லோ நார்வேயின் தலைநகரம்; புதுமுறையில் கட்டப்பெற்ற கடற்கரை நகரம். நார்வே நகரங்களில் மிகப் பெரியது. 1624-ல் IV-ம் கிறிஸ்டியன் என்னும் அரசனால் புதுப்பிக்கப்பட்டது. 1925 வரை கிறிஸ்டியானியா என்று வழங்கி வந்தது. இப்போது நார்வே மக்கள் தங்கள் மொழிச் சொல்லாகிய ஆஸ்லோ என்னும் பெயரை அதற்கிட்டு வழங்குகின்றனர். நார்வேயிலுள்ள பழைய பல்கலைக் கழகம் இங்குள்ளது ; அதற்குப் பிரெடரிஷானாப் பல்கலைக் கழகம் என்று பெயர். இந்நகரம் 1940-1945 வரை ஜெர்மன் ஆதிக்கத்திலிருந்து இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு விடுதலையடைந்தது. மக்: 4,17,238 (1946). கே. ஆர்.