கலைக்களஞ்சியம்/இடிதுப்பாக்கி

இடிதுப்பாக்கி (Blunderbuss) சில நூற்றாண்டுகள் முன்வரை வழக்கத்திலிருந்த ஒரு துப்பாக்கி வகை. இது வாயகலமானது. இதன் வாயின் வழியே பல குண்டுகளை இட்டு நிரப்புவார்கள். துப்பாக்கியைச் சுட்டால் குண்டுகள் வெளிப்பட்டு நாற்புறமும் சிதறும். ஆகையால் இலக்கு அருகிலிருந்தால் இக் குண்டுகளிற் சில அதைத் தவறாது தாக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குழாயின் பின்புறத்திலிருந்து

இடிதுப்பாக்கி

குண்டை உள்ளே போடும் துப்பாக்கி வழக்கத்திற்கு வந்ததும், இது வழக்கத்திலிருந்து மறைந்தது.