கலைக்களஞ்சியம்/இடைக்குன்றூர் கிழார்

இடைக்குன்றூர் கிழார் சங்ககாலப் புலவர்; இப்பெயர் ஊரால் வந்தது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வரலாறு இவர் பாட்டுக்களால் விளங்கும் (புறம் 76-79).