கலைக்களஞ்சியம்/இட்ஜுமோ

இட்ஜுமோ (Idjumo, ?-1756) பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய நாடகாசிரியர். இவர் இலக்கியத் தேவதையாகக் கருதப்படும் சுகவாரா என்னும் ஒன்பதாம் நூற்றாண்டு ராஜதந்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எழுதிய நாடகம் பேர்பெற்றதாகும். இதனினும் சிறந்தது இவருடைய சியூஷின்குரா என்னும் நாடகமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இட்ஜுமோ&oldid=1492183" இலிருந்து மீள்விக்கப்பட்டது