கலைக்களஞ்சியம்/இந்திய அரசாங்க விலங்கியல் இலாகா
இந்திய அரசாங்க விலங்கியல் இலாகா : இது 1916-ல் அமைந்தது. இதற்கு அடிநிலை கல்கத்தாவிலுள்ள இந்தியப் பொருட்காட்சிச்சாலையிலுள்ள விலங்கியல்-மானிடவியல் பகுதியாகும். அபூர்வமான இந்திய விலங்கினங்கள் பற்றிய பொருள்கள் ஏராளமாக இந்த இலாகாவில் இருக்கின்றன. இதன் நூல் நிலையமே ஆசியாவில் மிகச் சிறந்ததாகும். இந்த இலாகா இப்போது மீன்பண்ணை ஆராய்ச்சியும் தாவரப் பாதுகாப்பு வேலையும் செய்து வருகிறது. நான்கு திங்கட்கு ஒருமுறை ஆராய்ச்சி அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இப்போது இந்திய அரசாங்க மானிடவியல் இலாகாவாக இருப்பது 1945-ல் இதனின்றும் பிரிந்ததாகும்.