கலைக்களஞ்சியம்/இந்திய அரசியல் விஞ்ஞான சங்கம்
இந்திய அரசியல் விஞ்ஞான சங்கம் (Indian Political Science Association) : இது அரசியல் விஷயங்களை விஞ்ஞான முறையில் ஆராய்ந்து முன்னேற்றம் காண்பதற்காக 1938-ல் காசியில் நிறுவப்பெற்றது. ஆசிரியர்களும், எம். ஏ. பட்டம் பெற்ற மாணவர்களும், பிறரும் உறுப்பினராகலாம். அரசியல் பிரச்சினைகளைப்பற்றி எடுத்துரைப்பதற்காக இச் சங்கம் ‘இந்திய அரசியல் விஞ்ஞானப் பத்திரிகை’ என்ற பெயருடன் ஒரு காலாண்டுப் பத்திரிகை நடத்தி வருகிறது. 1950 முதல் இச்சங்கம் பாரிஸிலுள்ள சர்வதேச அரசியல் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இச்சங்கம் இந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் மாநாடு ஒன்று கூட்டி ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடத்துகிறது.