கலைக்களஞ்சியம்/இந்து குஷ்

இந்து குஷ் (Hindu Kush) இமாலயமலைத் தொடரின் மேற்குக்கோடி மலை. இடையில்சிந்து நதி ஓடும் பள்ளத்தாக்கு உள்ளது. மிக உயர்ந்த சிகரமான தீரர் மீர் என்பது சுமார் 25,000 அடிக்குமேல் உயரம் 12 ஆயிரம் அடி உயரமுடைய பல கணவாய்கள் இருக்கின்றன. அவை அபாயகரமாயிருப்பதால் போலும் மரணம் என்று பொருள்படும் குஷ் என்னும் பெயரிடப்பட்டுள்ளது. இங்கு இரும்புத்தாது ஏராளமாகக் கிடைக்கிறது.