கலைக்களஞ்சியம்/இந்திரி

இந்திரி (Indri) தேவாங்கைச் சேர்ந்த லீமர் வகையில் மிகப் பெரியது. மடகாஸ்கர் காடுகளில் வாழ்வது. தலையும் உடம்பும் சேர்ந்து இரண்டடி நீளமிருக்கும். வால் இரண்டே அங்குலம். இது கறுப்பும் வெண்மையுமான நிறமுடையது. பின் கால்கள் மிகப் பெரியவை. அவற்றால் தாவிச் செல்லும். மற்ற லீமர்கள் போல இரவில் வெளிவராமல் இது பகலில் உலவி இரை தேடும். பழங்களே இதற்கு முக்கிய உணவு. பார்க்க: லீமர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இந்திரி&oldid=1470705" இலிருந்து மீள்விக்கப்பட்டது