காளிதாசன் உவமைகள்/அரசன் அறம்

காளிதாசன் உவமைகள்
1. அரசன் அறம்

திரவன் தேரில் குதிரைகளைப் பூட்டுவது ஒரு முறைதான் பூட்டியபின் குதிரைகளுக்கு விடுதலையும் இல்லை, ஓய்வும் இல்லை.

காற்று இரவும் பகலும் இயங்குகிறது அதனின் இயக்கம் எப்போதேனும் நிற்கிறதா? காற்று வீசுவதில் வேறுபாடு காண்பதில்லை. யாவருக்கும் ஒரேவகையில் வீசுகிறது

ஆதிசேடன் தான் ஏற்ற நிலச்சுமையை எப்போதும் சுமந்து கொண்டே இருக்கிறான். அதை எங்கே வைப்பான்?

ஆறில் ஒரு பங்குப் பொருளை வரியாகப் பெறும் அரசனுடைய அறமும் அவ்வாறே அரசினை ஏற்றபின் அவன் கடமையில் சோர்வதில்லை; கைவிடுவதில்லை அனைவருக்கும் ஒப்பப் பயன்படுகிறான் அவன் உள்ளவரை உலகத்தைக் காப்பதற்குத் தன் கடமையைச் செய்கிறான். சா. 5:1

ஞாயிறு தன் ஆயிரம் கதிர்களால் பல இடங்களிலிருந்து நீரை கொள்கிறான் நீரை எடுக்கையில் நீர்நிலைக்கு ஊறு செய்வதில்லை எடுத்த நீரை தூய மழையாக, வாழ உலகில் பெய்கிறான் நாடு செழித்து வளம் பெறுகிறது

பெற்ற வரிகளிலிருந்து அரசனோ, எடுத்த நீரினின்று ஞாயிரோ, தனக்கென எள்ளளவும் பயன்கொள்வதில்லை.

வரி கொண்ட இடமும், நீர் மொண்ட இடமும் மட்டும் அன்றி, எல்லா மக்களுமே ஒருசேரப் பயன் துய்க்கின்றனர் ர. 1:18

திங்களும் ஞாயிறும் மக்களுக்கு நன்மை செய்வன. இரவையும் பகலையும் தருவன. பயிர்கள் வளர உதவுவன. ஆயினும், திங்கள் தாமரைக்குப் பகை; திங்களைக் கண்டால் தாமரை கூம்பும். அஃதேபோல் ஞாயிறு ஆம்பலுக்குப் பகை.

உயர்ந்த பண்புகள் எல்லோராலுமே போற்றப்படும் எனக்கூற இயலாது. ஆனால், அதிதி மன்னனின் குணங்களோ மாற்றார் மனத்திலும் இடம் கொண்டன. பகைவரும் அவனுடைய நற்பண்புகளைக் கொண்டாடினர். ர.17:75

செங்கதிர் ஒளியால் இருள் அகல்கிறது. மக்கள் தத்தம் தொழிலைச் செய்யவும், நெறியை அறியவும் ஒளி உதவுகிறது. ஆனால் ஞாயிறோ மக்களை 'இன்ன செய்’ என்றோ, 'இவ் வழியில் போ' என்று ஆணை இடுவதில்லை.

அரசன் மக்களுக்கு அறிவு புகட்டினான்; அவர்களிடம் உண்மையையே சொன்னான். அவர்களுடைய அக இருள் அகன்றது; பாவங்கள் அழிந்தன. அரசனது ஒழுக்கத்தை மக்கள் அனைவரும் கண்டனர்; அதைப் பின்பற்றி உயர்ந்தனர். ர.17:74

வேனிற் காலத்தில் மாமரம் பூக்கிறது.பூ மணம் உடையது; காமன் அம்புகளில் ஒன்றாகும். பின்னர் பூ மறைந்து பிஞ்சு தோன்றுகிறது. காயாகிப் பழமாகிறது, மணம், சுவை கொள்கிறது. பழம் வந்தபிறகு எவரே பூவைப்பற்றி எண்ணுவர்? பூவே பழம் ஆயிற்று என்று கூட எண்ணுவதில்லை.

இரகு திலீபனிடமிருந்து தோன்றியவனே; எனினும், இரகு என்னும் பழம் கிடைத்ததும், அவனுடைய உயர்ந்த பண்புகளால், தந்தை திலீபனாகிய பூவை அந்நாட்டு மக்கள் மறந்து விட்டனர். ர.4:9

ழங்கள் நிறைந்த மரம் வளைந்து வணங்கி நிற்கிறது. நீர்நிரம்பிய முகில் விண்ணில் தாழ்ந்து வருகிறது. ஒரிடத்திலேயே இருக்கும் தாவரம் மரம்; பல இடங்களில் விருப்பப்படி திரியும் பொருள் முகில் இரண்டும் தம்மிடமிருந்து உதவி பெறுவோருக்குத் தாழ்ந்து எளிதாகின்றன நல்லோருக்குச் செல்வம் கிடைத்தால் அவரது பெருமை பணிவால் வெளிப்படும்; பணிவே பெருமைக்கு அணிகலன்.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் மரம் தன் நலத்தைக் கருதுவதில்லை. தன்னை அண்டினோருடைய நலத்திற்காகத் தான் துன்பத்தை ஏற்கிறது. கோடையின் வெப்பத்தைத் தலையில் தாங்கித் தன் நிழலைத்தன் அடியில் இருப்பவர்களுக்குத் தருகிறது.

அரசனும் தன் இன்பத்தைக் கருதாமல் தன் நிழலில் வாழும் மக்களின் துன்பத்தைத் தலையில் ஏற்றுக்கொள்கிறான். சா. 5:7

மேகங்கள் கடல் நீரை மொண்டு செல்கின்றன. பல திசைகளிலும் சென்று மழையாகப் பொழிகின்றன. ஆதலால் முகில் வள்ளல்கள் எனப் புகழ்கின்றனர். ஆனால் முகில்களை வள்ளலாக்கியது கடல் என்பதை எவரேனும் நினைக்கிறார்களா?

அதிதி என்ற அரசனைப் பல வறிஞரும் புலவரும் அடைந்தனர். அவனின் கொடையால் தாம் பெற்ற பொருள்களைத் தம் ஊருக்குத் திரும்பியபின், பிறருக்கு வரையாது தந்து, வள்ளல் தன்மையை அடைந்தனர். அவர்களிடம் பொருள் பெற்றோர் அப்பொருளுக்கு முதற் காரணர் அதிதியையே மறந்து விட்டனர். ர.17:7

ரிய காலம் வந்ததும் பாம்பு இயற்கையாகவே சட்டை உரிக்கிறது. அப்போது அதன் தோலே அதற்கு சுமையாகத் தோன்றும். சொரசொரப்புள்ள இடத்தில் நுழைந்து அச்சுமையை நீக்கிக்கொள்ளும். தோல் உரித்த பின் பாம்பு பளபளப்புடன் ஒளி தரும் உரித்த சட்டையை அது மறுபடியும் ஏற்காது.

இரகு வானப்பிரத்த வாழ்க்கைக்கு உரியகாலம் வந்ததும் தன் அரசைத் துறந்து காட்டுக்குச் செல்கிறான். அவன் மகன் எவ்வளவு வேண்டிக்கொண்டும் துறந்த அரசைத் திரும்ப ஏற்கவில்லை. வானப்பிரத்தத்தில் அவனுக்குப் புதிய அமைதியும் ஒளியும் உண்டாயின. ர. 8:13

வேம்பு, அரசு, ஆல் போன்ற மரங்கள் பொருத்தமான நிலம் பெற்று வேர் ஊன்றி வளர்ந்தபின் அவற்றை கிள்ளிக் களைய முடியாது; வெட்ட வெட்டத் தழைந்து கொண்டே இருக்கும்.

அரசன் பகைப்புலத்தை வென்று தன் அரசை அங்கு ஏற்படுத்துகிறான். அவன் மக்களின் அன்பையும் மதிப்பையும் ஆதரவையும் பெறு முன்பு, அவனை எளிதில் வீழ்த்தலாம். ஆனால், மக்களுடைய மனத்தில் அவன் வேர் ஊன்றி நிலைத்த பின் அவனை அகற்றுதல் அரிது. மா.1:18

நெற்பயிர் நல்ல விளைச்சலைத் தருவதற்கு நாற்றுகளைப் பண்படுத்தப்பட்ட வயல்களில் நடுகிறோம். நாற்றுகளைப் பிடுங்கி நடுவதால் வளம் உயர்கிறது; குன்றுவது இல்லை. வளர்ந்த நெற் பயிரினிடையே தாமரைகள் மலர்கின்றன. செந் நெற்கதிர்கள் தாமரை மலரின்மீது தாழ்ந்து நெல்மணிகளைச் சொரிகின்றன.

நெல் விளைபுள்ள வங்க நாட்டு அரசர்கள் இரகுவை எதிர்த்தனர். அவர்களை இரகு வென்றான்; கங்கைக்கிளை நதிகளின் இடையில் வெற்றிக்கம்பம் நாட்டினான்; நாட்டைப் புண்படுத்தினான். அங்கு இருந்த அரசர்களை அவரவர் இடங்களிலிருந்து அகற்றி அவர்களுட் சிறந்தவரைத் தேர்ந்து எடுத்து, அவர்களுக்குப் பயிற்சி தந்து, முடிசூட்டி, அந்நாட்டிலேயே நிலைபெறச் செய்தான். அவர்களுடைய ஆளுகையில் நாடு வளம்பெற, அம் மன்னர்கள் தம் செல்வங்களை இரகுவின் அடி மலர்களில் காணிக்கையாக்கினர். ர.4:37

காற்று விரைந்து வீசினால் மரங்கள் ஒடியும்; மிக மெல்ல வீசினால் அவற்றில் அசைவு இல்லாது புழுக்கம் தோன்றும். மென் காற்று மரங்களைச் சிறிதே வளைக்கும்.

அஜன் பிற அர்சர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டு அவர்களைப் பதவியினின்று நீக்கவில்லை. மிக மென்மையாகப் பழகி அவர்கள் தன் ஆணைகளைப் புறக்கணிக்கவும் இல்லை. ஆனால் அனைவரும் தன் ஆணைக்கு வணங்குமாறு செய்தான். ர.8:9

வன் இளைஞன், இன்பங்களைத் துய்க்கும் பருவம், ஆற்றல், வாய்ப்பு பெற்றவன். அவன் மடியில் இளம் பெண் ஒருத்தி கிடக்கிறாள். ஆயினும் பல ஆண்டுகள் அவளைத் துய்க்காமல் 'கத்தி முனை' (அஸிதாரா) விரதம் மேற்கொள்கிறான். ஒருவன் இளம் பெண்ணுடன் ஒரே படுக்கையில் இருந்தாலும் தம் நடுவே கத்தி வைத்து இருப்பது போல, புலன் அடக்கத்துடன் ஐம்பொறிகளையும் வெல்வது அந்த நோன்பு.

பரதனுக்கு அரசாட்சி தானாகவே வாய்த்தது. அவன் பெற்றது தனி அரசு. உட்பகை, புறப்பகை எனும் முட்கள் அற்றது. எனினும், இராமனிடம் உள்ள பக்தியால் அதனை நுகராமல் பதினான்கு ஆண்டுகள் ஆட்சியில் கடுமையான 'அஸிதாரா' விரதத்தை மேற்கொண்டான். ர. 13.67

சரதன் பழைய ஆலமரம், பரசுராமன் என்னும் காட்டுத் தீயால், தசரதனுடைய ஆளுகையில் இருந்த பல மன்னர்கள் வீழ்ந்துபட்டனர். புதிதாகத் திருமணம் செய்துகொண்ட மக்களோடும் சுற்றத்தாரோடும் அயோத்திக்குத் திரும்பி, வத்து கொண்டிருக்கும்போது, காட்டுத்திபோல் பரசுராமன் அவனைப் பற்றினான்.இராமன் எனும் பெருமழை அவனையும் எஞ்சியோரையும் அத்தீயினின்று காத்தது; இராமன் 'உருகு தாதையைப்பொழிந்த் பேர் அன்பினால் தொழுது, முன்பு புக்கு இழிந்த வான்துயர்க் கடலினின்று ஏற்றினான்.' ர. 11:92

ட்வாகு குலம் என்ற கண்ணாடி உலகனைத்தையும் விளக்கும் கதிரவனிடமிருந்து உண்டானது.மேகமும் சூரியனால் உண்டானதே - வீசிய ஆவி அக் கண்ணாடியில் படிந்தது. கண்ணாடியின் எதிரொளி குறைந்தது.மக்கள் தம் ஒழுக்கத்தைக் காட்டும் கண்ணாடியைப் பார்த்தபோது அதில் இராமனிடம் உள்ள மாசு அவர்களுடைய கண்ணுக்குத் தென்பட்டது.

"துடைத்தால் அம்மாசு போய்விடும்; சற்று நேரம் வெய்யில் அடித்தாலும் அந்த மாசு அகலும்; ஆனால் அது வரை மாசு படிந்த கண்ணாடியாக இராமன் இருப்பது தகுமா?" இது இராமன் வாக்கு. ர. 14:37

நீரில் எண்ணெய் சிந்திவிட்டது; காற்றும் அடிக்கிறது: அலைகள் எழுகின்றன; அலைதோறும் எண்ணெய் பரவித் தோன்றுகிறது.அவ் எண்ணெயை நீரினின்று எடுக்க முடியாது; எடுக்க முயன்றால் அது மேலும் பரவும்.

சீதையைக் குறித்த பழிச்சொல் அயோத்தி நகரெங்கும் பரவியது, பரவிய பழிச்சொல்லைத் திரும்ப எடுக்க எவராலும் முடியாது.

“யான் இப்பழியைப் பொறுக்கவோ, மீட்கவோ வல்லேன் அல்லேன்” என்கிறான் இராமன். ர. 14:38

ன்று, நீல வானம் முழுதும் ஒளி பரப்பியது திங்கள் இன்றோ, தேய்பிறை நாள்தோறும் கலைகள் குறைந்து, பெரு விசும்பில் ஒரு மூலையில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

அன்று, கரையைத் திரைக்கைகள் வருட நீர் நிறைந்திருந்தது குளம், இன்றோ, தொலைவில் சேறும் சிறிது பசுமையுமே எஞ்சி இருக்க, அக்குளம் கோடையில் வறண்டு கிடக்கிறது.

அன்று, அகல் விளக்கு சுடர் விளங்கப் பொலிவு தந்தது இன்று, அது எண்ணெய் வற்றித்திரியினின்றும் சிறு பொறிகள் தெரிக்கும் நிலையில் உள்ளது.

உலகம் முழுவதிலும் தன் கலைகளைப் பரப்பி ஒளிபெற விளங்கி, பல மக்களைத் தாங்கிய இரகு வம்சத்தின் இறுதிக் காலம் இது இன்று இரகு வசம் தன் உயிருக்கே ஊசலாடி உளைகிறது. ர. 19:51

லையின்மேல் ஏறுபவன் குனிந்து தடி ஊன்றி மெள்ள ஏறுகிறான்; மலையினின்று இறங்குபவனோ நிமிர்ந்து செல்கிறான் உயர்பவனுடைய இலக்கணம் பணிவு: தாழ்பவனுடைய இலக்கணம் இறுமாப்பு.

பரசுராமன் விட்ணுவின் ஆறாம் அவதாரம்; தசரத ராமன் ஏழாம் அவதாரம் இருவரும் எதிர்ப்படும்போது, பரசுராமனுடைய வாழ்க்கை இருபத்தியொரு தலைமுறை அரசு களைகட்டு ஒய்ந்த நிலைமையிலும், தசரதராமனுடைய வாழ்க்கை சீதையை மணம் புரிந்து அவளுடன் அயோத்தி சென்று தன் பிறப்பின் பயனை அடையும் ஏறு நிலைமையிலும் இருந்தது. இரு இராமரும் எதிர்த்ததற்கு பரசுராமனுடைய இறுமாப்பு அன்றி வேறு காரணம் இலது.

வெற்றி கொண்ட தசரதராமன் பரசுராமனுடைய திருவடிகளைத் தன் தலையால் தொட்டு வணங்கினான் தோற்றவரிடம் பணிவுடன் நடந்துகொள்வதே வென்றவருக்குப் புகழ் தருவது ர. 11.89

னைவரும் பெற விரும்புவது திரு: கல்வி, குடிப்பிறப்பு, அரசு, செல்வம், அழகு, மன உறுதி, உடல் வலிமை, பொறை யாவுமே ஒன்று திரண்டது அத் திரு தாமரையில் இருப்பதாகக் கவிஞர் கூறுவர் பழைய பூவை விட்டுப் புதுமலரை நாடுவது அதன் இயல்பு.


திலீபனைச் சிறிது காலம் திரு அடைந்திருந்தாள்; அவனிடம் தோன்றிய இரகுவுக்குப் பருவம் வந்ததும் அத்திரு பழைய மலரை நீக்கிப் புது மலரை அடைவதுபோல இரகுவை வந்து அடைந்தாள். ர. 3:36

வர்ச்சிப் பெண் ஒருத்தி தன் காமக்கலையால் கணவனைத் தன் வயப்படுத்துவதுபோல, வேட்டை தசரதனைத் தன்வயப்படுத்தியது இன்பம் துய்ப்பதால் காமவேட்கை வளர்வதுபோல், வேட்டைமீது உள்ள அளவு கடந்த ஆசையால் தசரதனுடைய வேட்டை வேட்கை வளர்ந்தது; குறையவில்லை அரசை அமைச்சரிடம் ஒப்புவித்து, அம் மன்னன் அவ் இன்பத்தில் திளைத்திருந்தான். ர. 9.74


பிருது ஓர் அரசன் அவன் நிலத்தை உழுது பயிரிட்டு உணவு பெருக்கி, மக்கள் எவரும் பசியால் வருந்தாமல் காத்தவருள் முதல்வன் நிலத்தை பசுவாகவும், இமயத்தைக் கன்றாகவும் மேருவைப் பால் கறப்பவன் ஆகவும் ஆக்கி, நிலமடந்தை முலை சுரப்ப, உலகில் உள்ளனவற்றைக் கறந்து, மக்களுக்கு அளித்தான் ஒளிரும் மணிகளும் மருந்துகளும் கிடைத்தன அவன் கறப்பதில் வல்லவன்.

நிலத்திலிருந்து வெளிவந்தனவற்றுள் ஒருத்தி சீதை: இமயக் கன்று பசுவாகித் தந்த செல்வம் உமை இவர்களால் மனித குலம் உயர்ந்தது கு. 1.2