குடும்பப் பழமொழிகள்/கைம்பெண்
கைம்பெண்
விதவை துடுப்பில்லாத மரக்கலம். -சீனா
நிலம் மழையில்லாமல் அழும், விதவை கணவனில்லாமல் அழுவாள் -இந்தியா
கைம்பெண் வளர்த்த பிள்ளை மூக்குச் சரடு இல்லாத காளை.-( , , )
பணக்காரியான விதவையின் கண்ணீர் விரைவில் உலர்ந்து விடும். -டென்மார்க்
விதவையை மணப்பவன் விரைவிலே முடிக்க வேண்டும்.- இங்கிலாந்து
விதவை துக்கம் காக்கும் பொழுதே, விவாகம் செய்து கொள். -( , , )
விதவைகள் எப்போதும் பணக்காரிகள். -( , , )
பெருமையோடு ஒருத்தி ஒரு முறைதான் மனைவியா யிருக்க முடியும், ஒரு முறை தான் கைம்பெண்ணா யிருக்க முடியும். - ஃபிரான்ஸ்
செல்வமுள்ள கைம்பெண் ஒரு கண்ணால் அழுவாள், ஒரு கண்ணால் சிரிப்பாள். - போர்ச்சுகல்
அழகுள்ள விதவையை (விரைவில்) விவாகம் செய்து வைக்க வேண்டும், அல்லது புதைக்க வேண்டும், அல்லது கன்னிகா மடத்தில் அடைத்து வைக்க வேண்டும். -ஸ்பெயின்
விதவையின் வீட்டில் கொழுத்த சுண்டெலி இராது.
- துருக்கி
வயதான கன்னியைவிட இளமையான விதவை மேல்.
-யூதர்
கைம்பெண் கூரையில்லாத கட்டடம். -எஸ்டோனியா [மனைவியில்லாதவனுக்கும் இது பொருந்தும்.)