குடும்பப் பழமொழிகள்/அநாதைகள்

அநாதைகள்

அநாதைக் குழந்தைக்கு அழுவதற்குச் சொல்லிக் கொடுக்காதே. -அரேபியா

தந்தை யில்லாத குழந்தை பாதி அநாதை; தாயில்லாத குழந்தை முழு அநாதை. -யூதர்

பிச்சைக்காரனாக வாழ்வதைவிட, பிச்சைக்காரனாக மடிவது மேல். - இங்கிலாந்து

தாயில்லாத மறியை எல்லாக் குட்டிகளும் முட்டும்.

-எஸ்டோனியா

அநாதைக் குழந்தைகளுக்குத் தந்தையரா யிருங்கள்.

-ரஷ்யா