குடும்பப் பழமொழிகள்/பழமை

பழமை

பழைய இஞ்சியில் காரம் அதிகம். -சீனா

நம் முன்னோர்கள் தேவர்களா யிருந்தால், நாம் மனிதர்களா யிருக்கிறோம்; அவர்கள் மனிதர்களா யிருந்தால், நாம் கழுதைகளா யிருக்கிறோம். -யூதர்

உயர்ந்த கட்டடங்களுக்கு ஆழமான அடிப்படை இருக்கும். - இங்கிலாந்து

ஒருவன் தன் தாய்நாட்டிற்கு நல்லமுறையில் தொண்டாற்றினால், அவனுடைய முன்னோர்களைப் பற்றிக் கவலையில்லை. -வால்டேர்

பழைய துணி-புதிய கிழிசல். -எஸ்டோனியா