குடும்பப் பழமொழிகள்/மனைவி

மனைவி

இனிப்புக்குத் தேன், அன்புக்கு மனைவி. -இந்தியா

இல்லாள் இல்லாத வீட்டில் பேய்கள் குடியிருக்கும். -( , , )

விவாகமான பெண்கள் அனைவரும் மனைவியர் ஆகமாட்டார்

-ஜப்பான்

தீய மனைவி அறுபது வருடமாய்த் தீய்ந்து போகும் பயிருக்குச் சமானம். -( , , )

இளம் மனைவி தன் வீட்டில் நிழலாகவும், எதிரொலியாகவுமே இருக்க வேண்டும். -( , , )

மனைவியின் மூன்று அங்குல நீளமுள்ள நாக்கு ஆறு அடி உயரமுள்ள மனிதனைக் கொல்ல முடியும்.

-( , , )

மனைவியரும் பாய்களும் வந்த புதிதில் சிறப்பா யிருப்பவை. -( , , )

உன்னிடம் ஏழு பிள்ளைகள் பெற்றிருந்தாலும், அந்தப் பெண்ணை நம்ப வேண்டாம். -( , , )

உன் தாயின் கண்கள் அவளைக் கவனிக்கும்வரை நீ ஒரு பெணணை நம்பலாம். -( , , )

சேவலுக்கு வாழ்க்கைப் பட்டால், அதன் பின்னேதான் செல்ல வேண்டும். -சீனா

ஒற்றைத் திறவுகோல் கிலுகிலுக்காது. -( , , )

ஒரே மனைவியிருந்தால், வீட்டில் சண்டைஇராது. -( , , )

அழகில்லாத மனைவியரும், அறிவில்லாத வேலைக்காரிகளும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள். -சீனா

மனைவியால் அவதிப்படுவோன்-அந்தோ பரிதாபம்!

-அரேபியா

மனிதன், தன்மனைவியைத் தவிர, மற்ற எதைப்பற்றிப் பேசினாலும், பொறுத்துக் கொண்டிருப்பான். -பாரசீகம்

ஊமையான மனைவி கணவனிடம் அடிபடுவதேயில்லை.

-ஃபிரான்ஸ்

தேனீயை மனைவியாக உடையவன் சந்தோஷமாக யிருப்பான். -ஜெர்மனி

[சுறுசுறுப்புள்ள மனைவியால் ஆக்கம் பெருகும்.]
ஃபிடிலைப் போல் பெண்ணை மீட்டிவிட்டு உயரே தூக்கி வைத்து விடமுடியாது. -( , , )

குடியானவன் தன் மனைவியை அடிக்காவிட்டால், அவளுடைய ஈரல் அழுகிப் போகும். -போலந்து

வயோதிகனுக்கு வாய்த்த இளம் மனைவி அவன் நரகத்திற்கு ஏறிச் செல்லும் குதிரை. -( , , )

மனைவியர் இளைஞருக்கு நாயகிகள், முதியோருக்குத் தாதிகள். - இங்கிலாந்து

உண்மையான வீட்டுக்காரி அடிமையாகவும் இருப்பாள், வீட்டு அதிகாரியாகவும் இருப்பாள். -போஸ்னியா

ஒழுகும் கூரையும், புகையடையும் கூண்டும், ஓயாமல் சண்டையிடும் மனைவியும் ஒருவனை வீட்டை விட்டுக் கிளப்பிவிட முடியும். - வேல்ஸ்

ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால், இரு குற்றமுள்ளவள் வந்து சேருவாள். -( , , )

என் முதல் மனைவி மனைவியா யிருந்தாள்; இரண்டாமவள் என் யசமானியா யிருந்தாள்; மூன்றாமவளை நான் சிலுவை போல் வைத்துக் கும்பிடுகிறேன்.

-பல்கேரியா

அடங்காப்பிடாரி ஒருத்தி இருந்தால் போதும் - சுற்றிலும் பத்து வீடுகளுக்குக் காவல் நாய் தேவையில்லை.

-ஸெக்

தாடி ஒரு மனிதனுக்குக் கௌரவம்; மனைவி அவன் கருவி.

-எஸ்டோனியா

குருட்டுக் கோழிக்கும் ஒரு தானியம் கிடைக்கின்றது, குடிகாரனுக்கும் ஒரு மனைவி கிடைக்கிறாள். -( ,, )

குதிரையையும் மனைவியையும் இலகானில்லாமல் உபயோகிக்க வேண்டாம். -( ,, )

உலகத்திற்கெல்லாம் தெரிய வேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் சொன்னால் போதும். -( ,, )

கன்னியா யிருக்கும் பொழுது மாடப்புறாவா யிருந்தவள் மனைவியான பின் தண்டாயுதமாகி விட்டாள். -( ,, )

மனிதனுக்கு மனைவி வாய்த்தே தீருவாள். -( ,, )

கப்பல், குதிரை, அல்லது மனைவியை மற்றவரை நம்பி ஒப்படைக்காதே. -( ,, )

மனிதனின் பூட்டு மனைவி. -( ,, )

மனைவி ஒருமுழம் தள்ளி யிருந்தாலும், அந்த அளவுக்கு மனிதன் சுதந்திரமுள்ளவன். -( ,, )

மனிதன் வாழ்க்கையை மனைவியே பாழாக்குகிறாள். -( ,, )

எல்லாப் பெண்களும் நல்லவர்களா யிருக்கும் பொழுது, கெட்ட மனைவியர் எங்கிருந்து வருகின்றனர்? -( ,, )

அழகான பெண் கண்ணுக்குத்தான் சுவர்க்கம், ஆனால் பணப்பைக்குச் சனியன், ஆன்மாவுக்கு நரகம். -( ,, )

ஏழை மனைவிக்கு எத்தனையோ இன்னல்கள் : அழுகின்ற குழந்தைகள், ஈர விறகு, ஓட்டைப் பானை, கோபமுள்ள கணவன். -ஃபின்லந்து

என் கணவன் என்னை அடிப்பதில்லை, காரணம் அவனுக்கு என்மீது அன்பில்லை. - கிரீஸ்

மனைவியர் நல்லவரா யிருந்தால், கடவுளும் ஒருத்தியை மணந்திருப்பார். -ஜியார்ஜியா

அழகான பெண்ணின் புன்னகை பணப்பையின் கண்ணீராகும். -லத்தீன்

மனைவியில்லாத கூடாரம் தந்தியில்லாத வீணை. -ருமேனியா

பெண்ணைவிட நாய் அறிவுள்ளது, அது தன் யசமானரைப் பார்த்துக் குரைப்பதில்லே. -ரஷியா

பெண்ணின் யாத்திரை சமையலறையிலிருந்து வாயிற்படிவரை -( ,, )

மனைவிக்குக் கணவனே சட்டம். -( ,, )

சில சமயங்களில் அறிவுள்ள மனைவியின் சொல்லையும் கேட்டு நடக்கலாம்.

-செர்பியா

மனைவி இன்றியமையாத ஒரு தீமை. -( ,, )

உன் கணவனை ஒரு நண்பனைப் போல நேசி, ஆனால் பகைவனைப் போல எண்ணி அவனுக்கு அஞ்சி நட.

-ஸ்பெயின்

ஒரு மனிதனின் அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவன் மனைவிதான். -( ,, )

பெண்டாட்டி யென்றால், புடவை, துணிமணிகள் என்று பொருள். -ஆப்பிரிகா

உன் மனைவியிடம் ஆலோசனை கேள், ஆனால் அவள் சொல்வதற்கு மாறாகச் செய். -( ,, )

பெண்ணுக்குப் பணிவது நரகத்திற்குப் பாதை.

-( ,, )

உத்தமமான மனைவி கணவனுக்கு ஒரு கிரீடம். -ப. ஏற்பாடு

புதிதாகக் கலியாணமானவனே தன் மனேவியிடம் செய்திகள் கூறுவான்.

- இங்கிலாந்து

இங்கே புதைத்திருக்கிறது என் மனைவியை; அவள் இங்கேயே யிருக்கட்டும் இப்போது அவளுக்கு ஓய்வு, எனக்கும் ஒய்வு. -டிரைடன்

பலர், தாம் சிக்கனமில்லாமல் வாழ்ந்து விட்டு, மனைவியைக் குறை சொல்லுவர். -இங்கிலாந்து

மிகவும் சாந்தமான கணவர்களுக்கும் புயல் போல் சீறும் மனேவியர் அமைகின்றனர். -( ,, )

அழகிய மனைவியை உடையவனுக்கு இரண்டு கண்களுக்கு மேல் தேவை. -( ,, )

அறைகள் காலியா யிருந்தால், மனைவியர்க்குத் தலைகிறு கிறுக்கும். - இங்கிலாந்து

மனிதன் எல்லா விஷ ஜந்துக்களுக்கும் மருந்து கண்டுபிடித்திருக்கிறான், ஆனால் தீய மனைவிக்கு மட்டும் இன்னும் மருந்து காணவில்லை. -ராபலே

கெட்ட மனைவியால் கணவனின் கப்பல் உடையும்.

- ஜெர்மனி

இறந்து போன மனைவியும், உயிருள்ள ஆடுகளும் ஒரு மனிதனைச் செல்வனாக்கும். -( ,, )

கெட்ட மனைவியை உடையவன் செல்வங்களின் நடுவில் வறுமையில் வாடுபவன். -( ,, )

உன் மனைவி குள்ளமாயிருந்தால், நீ குனிய வேண்டும்.

-யூதர்

மனைவி உறங்கும் பொழுது, (சாமான்) கூடையும் உறங்குகின்றது. -( ,, )

ஒரு மகள் வேண்டுமென்று தேர்ந்தெடுப்பதுபோல், மனைவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். -இதாலி

இறந்த மனைவியின் துக்கம் வாயிற் கதவோடு சரி. - -இதாலி

ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. -லத்தீன்

(ரோமாபுரியில் ஆண்டு வந்த தலைவர்கள் ஸீஸர்கள், ஸீஸரின் மனைவி, எவரும் சந்தேகம் கொள்ள இடமில்லாமல், அப்பழுக்கற்றவளாக இருக்கவேண்டும்.)
பிறர் மனைவியரிடம் ஒருபோதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டாம். -( ,, )

மனைவி உள்ள கட்டிலில் சண்டையில்லாமல் இராது.

-( ,, )

விவாகமான மனிதன் ஒவ்வொருவனும் தன் மனைவி ஒருத்திதான் உலகிலே நல்லவள் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். - ஸ்பெயின்

மனைவியைக் கௌரவிக்காதவன் தன்னையே குறைவு படுத்திக் கொள்கிறான். -ஸ்பெயின்

ஊமை மனைவி வாயால் ஏசமாட்டாள், கைகளை நெரித்து ஏசுவாள். -யூதர்

மனைவியைப் பற்றிக் குறை சொல்பவன் தன்னையே இழிவு செய்து கொள்கிறான். -ஸ்காட்லந்து

மனைவி விட்டுப் பிடித்தால்தான், ஒருவன் முன்னிலைக்கு வரமுடியும். -( ,, )

வெள்ளாட்டின் வெண்ணையும், பெண்டாட்டி சொத்தும் வீட்டுக்கு வேண்டாம். -ஃபின்லந்து