குறட்செல்வம்/அழுக்காற்றை அகற்ற வழி

21. அழுக்காற்றை அகற்ற வழி


மனித வாழ்க்கையின் சிறப்பியல்புகள் உணர்வுகளாலும் குணங்களாலும் அமைவனவேயாம். பல கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப் பெறுவதால் சுவர் எழுந்து வீடு உருவாகிறது. அவ்வீட்டின் நிழல் வாழ்வதற்கு இனிமை யாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. அமைதியும் அளிக்கிறது. அதுபோல, பல்வேறு வகைப்பட்ட தல் உணர்வுகளாலும், குணங்களாலும் வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கை, சமுதாயம் என்ற கட்டிடத்தை எழுப்புகிறது.

அவ்வாறமைந்த சமுதாய அமைப்பு இனிய அமைதி கலந்த வாழ்க்கை அமைப்பைச் சமுதாயத்திற்குத் தருகிறது. - -

நற்குணங்களிலும்கூட ஒன்றிலிருந்து தொடர்ச்சி யாகப் பல நற்குணங்களை வளர்க்கிற தாய்மை நிலை யுடைய நற்குணமுண்டு. அழுக்காறாமை, அதாவது பொறாமைப்படாதிருத்தல், ஒரு முதனிலைத் தாய்மை நற்குணம். அழுக்காறாமையை மேற்கொண்டொழுகு வதன் மூலம், அவாவை அறுக்கலாம். ஆசைகளினின்று விடுதலை பெறலாம்.

ஏளெனில், ஆசையின் தாயே அழுக்காறு. ஆசை பிலிருந்து விடுதலை பெறுவதால், வெகுளியினின்றும் விடுதலை பெறலாம். வெகுளியினின்று விலகினால் இன்னாச் சொற்களைப் பேசல், ஒறுத்தல் முதலிய பல்வேறு திச் செயல்களினின்றும் விடுதலை பெறலாம்.

அழுக்காறு கொள்ளுதல் நரகத்தை இந்த நிலவுலகத்தில் உருவாக்குவதையே ஒக்கும். • . -

அழுக்காறு, கொண்டவரை மட்டும் அழிப்பதில்லை. யாரை நோக்கிக் கொள்ளப்படுகிறதோ அவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. முடிவில் சமுதாயம் முழுவதுமே பற்றி எறிந்துவிடும். தன்னைக் கொண்டவரையும் அழித்து, சமுதாயத்தையும் அழிக்கின்ற பேராற்றல் அழுக்காற்றிற்குண்டு. அதனால், பெறுதற்கரிய உயர்ந்த மாமேதைகளுக்கும் மகாத்மாக்களுக்கும் கூட துன்பம் விளைவிக்கப்படுகின்றது. ஏன்?. கடைசியில் அவர்களை இழந்தே விடுகிறோம். -

உலக வரலாற்றில் நிகழ்ந்துள்ள போர்கள் யாவற்றுக் கும் அடிப்படை அழுக்காறேயாகும். இயேசு, நபிகள், ! சாக்ரடீஸ், அண்ணல் காந்தியடிகள் ஆகியோரை எல்லாம் காலத்திற்கு முந்தியே நாம் இழந்ததற்குக் காரணம் அழுக்காறே யாகும். அதனாலன்றேர், எந்த நற்குணம் இருந்தாலும், இல்லையாயினும் அழுக்காறாமை ஒன்றைப் பெற்றிருப்பது பெரும்பேறு என்று அறிஞர்கள் கூறுகின்றனர். .

திருவள்ளுவர் அழுக்காறாமை என ஓர் அதிகாரமே வகுத்து, பத்துக் குறட்பாக்களில் அழுக்காற்றின் தீமையை விளக்குகின்றனர். உலகியல் வழக்காற்றுச் சொல்லால் அழுக்காற்றைப் 'பாவி' என்று ஆத்திரத்தோடு குறிப்பிடு கின்றார், திருவள்ளுவர். ' . . . . .

அழுக்காறு எளஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும். என்பது திருக்குறள். பாவங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பதால், அழுக்காற்றைப் பாவி என்று குறிப்பீடு கின்றார். அழுக்காறு வேறு - பாவி வேறல்ல, என்ற கருத்தை விளக்குவதற்காக ' என ஒரு பாவி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். சில தீமைகள் யாரை நோக்கிச் செலுத்தப்படுகிறதோ அவர்களுக்கே அதிகம் தீமை தரும்.

அழுக்காறு என்பதோ, செலுத்துபவர்களுக்கே அதிகத் தீமை தரும். அழுக்காற்றின் நிலைக்களன்கள் பெரும்பாலும் செல்வமுடைமை, அறிவுடைமை, புகழுடைமை ஆகியனவாம். இவற்றை, மற்றவர்கள் பெற்று விளங்குவதைக் கண்டு மனம் பொறுக்கமாட்டாம லும் அவற்றை அவர்களைப்போல நன்கு முயன்று. பெற, தமக்கு ஆற்றல் இல்லாமையாலும் தோன்றுவதே அழுக்காறு. -

அழுக்காற்றின் காரணமாகப் பிறருடைய செல்வம், அறிவுடைமை, புகழுடைமை, ஆகியவற்றிற்கு, குற்றம். குறைகளைக் கற்பித்து, அழுக்காற்று நெஞ்சுடையோர் களங்கப்படுத்துவர். இதன் விளைவு தன் முயற்சியை அழித்துக் கொள்ளுதல், பிறர் முயற்சிக்கும்.ஊறு விளை வித்து அழித்தல், பொதுவில் - முடிவாக, முன்னேற் றமும் ஆக்கமும் தடைப்படுகின்றன. இதனை விளக்க வந்த திருவள்ளுவர் திருச் செற்றுத் தீயுழி உய்த்து விடும்’ என்றார். -

அழுக்காறுடையான் ஒருவன் செல்வத்தைப் பெறு வதற்குரிய முயற்சிகளில் ஈடுபட மாட்டான். அவனுடைய முழுநேர வேலை குற்றங் காணல், துாற்றல், தீங்கு விளைவித்தல் ஆகியனவே. இத் தீயவரிடம் செல்வம் எப்படிச் சேரும்? ஆதலால் செல்வத்தை அழித்து என்றார். செல்வம் இன்மையின் காரணத்தாலும், அழுக்காற் றின் காரணத்தாலும் பல்வேறு தீச்செயல்களைச் செய்வ தால் நரகத்திற்குச் செல்ல ஏதுவாகிறது. இதனைத் தீயுழி உய்த்து விடும் என்றார். இம்மைக்கு வேண்டிய செல்வம், மறுமைக்கு வேண்டிய வீடு இரண்டையும் கெடுப்பதால் அழுக்காறு கொடுமையினும் கொடுமை யானது. வள்ளுவரே பாவி’ என்று வசைபாடுவாராவின் நம்நிலை என்ன? - -

அழுக்காறு கொள்ளுதல் தீது. முற்றிலும் உண்மைமுக்காலும் உண்மை. எந்த ஒரு தீமையும் தோன்றாமல் தடுப்பதும் பாதுகாக்க வழிவகை உண்டல்லவா? அத் தீமை தோன்றாமல் தடுப்பதும் சமுதாய நெறியில் மிகச் சிறந்ததாகும். கயவர்களின் அழுக்காறு மாற்ற முடி யாதது. அவர்கள் கொல்லத்தான்் பயன்படுவார்கள். ஆனாலும், சாதாரண - நடுத்தர மக்களிடமிருந்து அழுக் காற்றை அகற்ற, உடையோர் முயன்றால் முடியும். அழுக்காறு கொள்ளுதல் எப்படித் தீதோ அப்படியே, பிறர் எளிதில் அழுக்காலு கொள்ளும்படி நடந்து கோள்ளுதலும் தீதாகும். - . .

அதனால் செல்வம் உடைமையினும் எளிய வாழ்க்கை - கொடுத்து. உவந்து - ஒப்புரவு அறம்பேணி வாழ்தில் அவசியம். அறிவுடைமையில் தன்னடக்கம் தேவை. புகழை விரும்பாமல் அடக்கமாய் வாழ்தல் அவசியம். பிறர் புகழ்ந்து கூறும் சந்தர்ப்பங்களையெல்லாம் தவிர்க்க முயலவேண்டும். இங்ஙனம் வாழ்ந்தால் இல்லாதோரிடம் அழுக்காறு எழாமல் - தோன்றாமல் தவிர்க்கலாம். காரணம் அங்கு இன்மை அவ்வளவு பெரியதாகத் தோற்றம் அளிக்காது. -

அழுக்காறாமை குணத்தை மேற்கொள்ள வேண்டுமா யின் அதற்கு முதன் முயற்சி, மற்றவர்கள் எல்லாவற்றை யும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புதல் - பிறர் இன்பத்தில் தான்் மகிழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் அழுக்காறு அகலும் - அருளியல் தோன்றும். -

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.