குறட்செல்வம்/புறஞ்சொல்லும் புன்மை

22. புறஞ்சொல்லும் புன்மை


திருக்குறள் நடைமுறை வாழ்வியலின் விளைவுகளை

விளக்கும் நூல். குற்றங்களையும் குணங்களையும் அவற் தின் காரண காரியங்களையும் தெளிவாக விளக்கி வழி காட்டுகிறது. அதுமட்டுமன்று. ஒன்றின் முழுத்தன்மை யையும் அளந்து காட்டுவதில் திருக்குறள் மிகச் சிறந்து விளங்குகிறது. - - -

மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பகை, புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தல். புறங்கூறி. வாழ்தலின் மூலம் பொய் பெருகுகிறது. பகை வளர்கிறது. நம்பு கெடுகிறது. நல்லவை தேய்கிறது. அல்லவை பெருகுகிறது.

புறங்கூறுதலைவிட மோசமான குணக்கேடு பிறி தொன்றில்லை என்று ஒழுக்க நூலார் வரையறுத்துக் காட்டுகின்றனர். 'புறங்கூறுதல் வெறுப்பை வளர்க் கிறது. வெறுப்பு, வேற்றுமைகளை விளைவிக்கிறது - வேற்றுமைகள் பிரிவினைகளை உண்டாக்குகின்றன! என்று குவாரில்ஸ் என்ற மேனாட்டு அறிஞர் கூறுகிறார். .

மனித இயலும், திருவருட் சிந்தனையும் இல்லாத மனிதர்கள், தீமைகளைத் தோண்டி எடுக்கிறார்கள். அத் தீமைகளை உதட்டில் தாங்கிப் பகை என்னும் பெரு நெருப்பை எரிக்கிறார்கள். தற்காலிகமாகப் பிறர் குற்றத் தில் குளிர் காய்கிறார்கள். ஆனால் அடையக் கூடிய அயனோ அழிவு! அழிவு! அழிவு! - அதனாலன்றோ அப்பர் அடிகளும்கூட சமுதாய்த் தோடு பழகுதற்குரிய இனிய பழக்கமாக, குணங்களைச் சொல்லியும் குற்றங்களைப் பேசியும் வாழவேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

சொல்லுதலுக்கும் பேசுதலுக்கும் இடையேயுள்ள வேற்றுமையைப் பற்றி நாம் சாதாரணமாக நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் அப்பரடிகள் பெரிய வேற்றும்ை யைக் காண்கிறார். சொல்லுதல் என்பது பிறரிடத்தில் ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிய குற்றங்களைச் சொல்லுதலைக் குறிக்கும். அவ்வாறு சொல்லுதல் குற்றம். சொல்லுதல் மட்டும் குற்றமன்று. அத்தகு. சொல்லாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் குற்றம்.

அதனாலன்றோ, அறங்கூறும் அவையில் இருபாலும் கேட்டு, மறுக்கவோ உடன்பாடாகவோ உரிய வாய்ப்புகள் முழுமையும் கொடுத்து, பின் அறங்கூறப் பெறுகிறது. ஆனால், இன்றோ புறங்கூறலே பெருகி வளர்ந்திருக் கிறது. அதையும் உண்மையென்று நம்பி உரியவரைக் கேட்காமலேக்கூட மாறுபாடும், சினமும் கொள்கிறவர்கள் பொறுப்பு வாய்ந்தவர்களில்கூட இருக்கிறார்கள் என் றால் என்னென்று கூறுவது?

ஒருவர் இல்லாதபோது அவருடைய குற்றங்களைச் சொல்லுதல் - கூறுதல் புறங்கூறல் ஆகும். அதனைத் கூடாதென்று தேவாரம் கூறுகிறது. அடுத்து. ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையிலும்கூட புறங்கூறும் குற்றம் விளக்கப் பெறுகிறது. "தீக்குறளைச் சென்றோதோம்’ என்பது ஆண்டாள் வாக்கு. குறளை என்பது கோள், புறம் ஆகிய சொற்களைக் குறிக்கும். அதுவும் தீக் குறளை என்று சொன்னது உண்மையல்ல்ாத பொய்யை, தீமை பயக்கக் கூடியதை வலிய்த் தாமே சென்று மற்றவர் களிடம் சொல்லுதலைக் குறிக்கும். அதனால், குற்றங்களைச் சொல்லுதல் திது. குணங் தளைச் சொல்லவேண்டும். குற்றங்களைப் பேசவேண்டும் என்கிறார் அப்பர் அடிகள். பேசுதல் என்பது நேரில் நின்று பேசுதலைக் குறிக்கும். ஒருவரை நேரில் சந்தித்துப் பேசும்பொழுது அவர்தம் குற்றங்களை இனிய முறையில் எடுத்துக்காட்டிப் பேசவேண்டும் அது குற்ற முடையார் திருந்துதற்கு வாய்ப்பாக இருக்கும். இதனையே திருவள்ளுவரும், -

கண்கின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்னோக்காச் சொல்.

என்று குறிப்பிடுகின்றார்.

புறங்கூறுபவர்கள்-பிறர் குற்றம் பேசித் திரிபவர்கள் அறம் பேசுவது போல நடிப்பார்கள். நன்மைக்காகப் பரிந்து பேசுவதாகப் பாவனை காட்டுவார்கள். நடிப்பிலும் பாவனையிலும் மயங்குகிறவர்கள், அவர் கூற்று உண்மையோ என்று ஐயப்படுவார்கள். ஐயத்தின் வழி களங்கம் பிறக்கும். களங்கத்தின் வழி மனங்கலந்த நட்புக்

கெடும். பிரிவர்-பேதுறுவர்.

அதனாலன்றோ தமிழ் மறை, ஆழ்க தீயது: என்றோதுகிறது. தீயவர் அழிதல் அன்று. அதன்ர் லன்றோ, புராணங்களிலும்கூட, அரக்கர்கள் திமை யொழித்து நல்லவர்களாக மாறி, வளர்ச்சியுற்றுத் திருவருளுக்குப் பாத்திரமானார்கள் என்ற செய்தி ப்ே பெறுகிறது.

சொற்களால் பகை வளர்க்கும் ஒருவர் நெஞ்சம் எங்ங்ணம் அறச்சார்புடையதாக இருக்க முடியும் என்பது வள்ளுவர் கேள்வி. புறங்கூறுபவர் சொல்லை நம்ப வேண்டாம். நெஞ்சத்தின் இயல்பு எதுவோ, அதை விளைவுகள் காட்டும், சொற்களெல்லாம் நெஞ்சத்தின் இயல்பு முழுவதையும் காட்டுவதும் இல்லை. நமது தலைமுறைக் கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்கள், *

சொல்லில் வருவது பாதி-கெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி.

என்று குறிப்பிடுகிறார். அறநெஞ்சுடையார் குற்றமுடை யோரைக் கூட எளிதில் பகைக்க மாட்டார்கள். காரணம், குற்றத்தைத் திருத்த முடியும் என்று நம்புவார்கள். அதற் குரிய வழிவகைகளைக் கண்டு முயற்சிப்பார்கள். அறநெஞ் சுடையார்க்கு, குற்றத்தின் மீது வெறுப்பு இருக்குமே யன்றிக் குற்றமுடையார் மாட்டு வெறுப்பிருக்காது. அவனுடைய மனம் அறவழிப்பட்டதன்று. அவனுக்கு அறம் தெரியவே தெரியாது. அவன் மனம் தீது. கருதியது முடிக்க அறம் சொல்லிக்கொள்வது போலக் காட்டு கின்றான் என்று திருக்குறள் விளக்குகிறது. -

நீரில் நெருப்பிருக்காது என்பதுபோல, புறம் சொல்லும் புன்மையவரிடத்து அறம் இருக்காது.- இருக்க முடியாது என்பதை உணர்ந்து வாழவேண்டும். புறம்கூறும் பழக்கத்தினின்றும் நம்மை வில்க்கிக் கொள்ள வேண்டும். அதனைக் கேட்கும் பழக்கத்தையும் கைவிட வேண்டும்.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான்் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். - -

இ.

டு со с