குறட்செல்வம்/மனையறத்தார் கடமை

7. மனையறத்தார் கடமை


வாழ்க்கை குறிக்கோள் உடையது. தோழமை கொள்வதும் துணை நிற்பதும் துயர் துடைப்பதும் வாழ்க்கையின் இன்றியமையாத பணிகள். இப்பணி களற்ற வாழ்க்கை வாழ்க்கையாகாது. மனிதன் ஊண் உண்பதும் காதற் பெண்டுடன் களித்து மகிழ்ந்து மனையில் வாழ்வதும், குறிக்கோள் பாதையில் இனிதே நடைபோடத்தான்்.

இன்று பலர் உண்பதே தொழிலாகக் கொண்டு இருக்கின்றனர்; பெண்ணின்பமே இன்பமெனக் கருது கின்றனர். இவர்கள் உருவத்தால் மனிதர்கள்: உணர்ச்சி. யில் விலங்குகள். வனத்தில் வாழ்வதற்குத் தப்பிப்போய் நாட்டில் நடமாடுகின்றனர்.

வள்ளுவம் வாழ்வாங்கு வாழும் நெறியுணர்த்தும் நூல். வாழும் மனிதனுக்குத் துறைதோறும் கடமைகள் உண்டு. சில துறைகளைத் திருவள்ளுவரே எடுத்து விளக்குகின்றார், உழைப்பையே உயர் துணையாகக் கொண்டு பொருள் பல செய்து குவித்து, பகுத்துண்டு பல்லுயிரோம்பி வாழ்தல், வாழ்வாங்கு வாழும் நெறி யாகும். இங்ங்னம் பொது வகையாக மட்டும் கூறாமல் பகுதி பிரித்தும் கூறுகிறார்.

. துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

துறந்தார் என்பவர் யார்? கனிந்த கணியென உள்ளத்தால் பழுத்து யாதொரு பற்றுமின்றிப் புகழ் இதழ் களில் நாட்டமின்றிப் பழுத்த மனத்தடியாராக வாழ்பவர் ಷGar இல் றவிகள். அவர்கள் உள்ளம் கருணையின் ஊдода: தாடெல்லாம் வாழக் கருதும் பேருள்ளம். அவர்களைப் பாதுகாப்பது நாட்டின் பாதுகாப்பாகும்; மனையறத்தின் மங்களத்திற்கு அரணாகும். w х

துறந்தாரோ உரிமையுடையதென யாதொன்றையும் பேற்றிலர்; ஒடும் பொன்னும் ஒக்க நோக்கி வாழும் சீலமுடையார்; கந்தை ஆடையையும் மிகையெனக் கருது வோர். ஆதலால் அவர்களுக்காக அவர்கள் நலங்கருதி, மனையறம் நிகழ்த்துவோர் பணி செய்தல் பாங்காகும். இந்தத் திருக்குறள் நெறியையே திருத்தொண்டர் புராணம் விளக்கி அருளுகிறது. -

அடுத்துப் பேணத் தக்கவர் "துவ்வாதவர்' திருவள்ளுவர் துவ்வாதவர் என்ற ஓரினத்தைப் பேணுதற் குரியவராக விளக்கி அறம் வகுத்தல் மிக உயர்ந்த பெரு நெறியாகும். உயிர்களின் இயற்கை துய்த்தலாகும்.

உயிர்கள் துய்ப்பனவற்றைத் துய்த்து வேட்கை தணிந்துழியே நலமுறுகின்றன. இதுவே சமயத்தின் அடிப்படை நியதி. . .

துய்த்து அனுபவிக்கப் பிறந்த உயிர்களுக்குத் துய்ப்பன வழங்காமல் ஏழ்மையில் அவலமுறச் சேய்துவிட்டுத் துய்க்கும் நெறிக்கும் அப்பாற்பட்ட இறைவனின் முன்னே துய்த்தற்குரிய பொருள்களைப் படைப்பது பேதைமையேயாம். அதுமட்டுமின்றி ஏமாற்ற மூம் ஆகும்.

இறைவன், துய்த் தற்குரிய பொருள்களைப் படைத்துக் காப்பது, உயிர்கள் துய்த்து மகிழ்ந்து, உய்தி பெறுதற் காகவே யாம். அங்ஙனம் துய்த்தற்குரிய புலன்களை பெற்றிருந்தும் துய்த்தற்குரிய வாயில்களாகிய பொறி களைப் பெற்றிருந்தும் இறைவன் கருணையால் துய்த்தற்குரிய பொருள்களைப் பெற்றிருந்தும், பலர் துய்க்கும் வழியின்றித் தொல்லைப்படுகிறார்கள்.

தன்னலச் செறிவின் காரணமாகவும், துய்த்தல் துறத்தலுக்கு வாயில் என்ற அறிவின்மையினாலும், இறைநெறி,பல்லுயிரையும் பேணிப்பாதுகாக்கும் நெறியே என்ற உணர்வின்மையினாலும் இந்த அவலங்கள் ஏற்படுகின்றன. மனையறத்தைப் பெயரளவின்றி அட்ன்மையிலேயே அறமாக நிகழ்த்த வேண்டுமாயின் துவ்வாதவரைப் பேணவேண்டும். *

அடுத்து, பேணத்தக்கவராக வருபவர் இறந்தாராவர். அதாவது நம்முடைய தமிழ்மரப்புப்படி, அவாவும் வேட்கை புத் தணிந்தபோதுதான்், உயிர் நிலையான நிலையை எய்துகின்றது. அதுவரையில் பிறப்பு இறப்புச் சுழலில் இத்திச் சுழல்கிறது. சில சமயங்களில் பருவுடலோடு இந்த உலகிடை நடமாடித் துய்த்து மகிழும்; சில பொழுது பருவுடலினின்று பிரிந்து இறந்து பட்டதாகக் கருதப் பட்டாலும் நுண்ணுடலோடு உலவிப் பொறிகளால் துய்க்காமல் புலன்களால் மட்டும் துய்க்கும்.

அங்ஙனம் பருவுடல் இறந்துபட்டு நுண்ணுடலில் திரியும் இறந்தார்க்கும், இல்வாழ்வோர் துணையாக நின்று, நீத்தார் நினைவு நாட்கள் கொண்டாடுவதன் மூலம் அவர்களுடைய துய்ப்புக்குத் துணை நின்று அவ்வழி வேட்கை தணியச் செய்யவேண்டும். -

- இங்ஙனம் நுண்ணுடலில், வாழ்வோர் உலகியலில் இறந்து பட்டாரென்று கருதப்பெற்றாலும், உண்மையில் இறந்தவர்களாகார். இவர்கள் நிலை பரிதாபகரமானது. - துய்ப்பார்வத்தைத் துரண்டும் புலன்கள் ச்ெத்தபாடில்ல்ை.

ஆனால் துய்ப்பனவற்றைத் தேடிப் பெறுதற்குரிய கருவிகளாகி, பொறிகளோ இல்லை. புலன்கள் எண்னும் கற்பனை செய்யும்; ஆசைப்படும். ஆனால் தாமே அடைதற்குரிய ஆற்றல் அவர்களுக்கில்லை. ஆதலால், அந்த உயிர்களின் துய்ப்பு நலன்களைப் பாதுகாப்பது இல்வாழ்வோரின் கடமையாகிறது.

"இறந்தார்' என்ற சொல்லில் உள்ள றகரத்தை இடையின ரகரமாகக் கொண்டாலும் யாப்பில் பிழை யில்லை. அப்படி இரந்தார்' என்று கொண்டால் யாதொரு பற்றுக்கோடுமின்றி-உடலில் உறுப்புக் குறை யினராக-உடற் தொழிற்பாடு செய்ய முடியாமல் பிறரை நோக்கி வாழவேண்டிய நிலையில் இரந்து நிற்பாரைக் குறிக்கும்.

இன்றைய உலகில் இரப்பாரினம் கண்டுகொள்ள முடியாமல் குழம்பிக் கிடக்கிறது. யாதோர் உடற் குறையு மின்றி உழைப்பிற்கேற்ற முழுத் தகுதியுடையதாய் உடல் விளக்கமுற இருந்தும் கருவி கரணங்கள் யாதொரு பிழையு மின்றி இயங்கினாலும் உழைக்கும். சுபாவம் இன்மையின் காரணமாக இரந்து வாழ்கின்ற 'சுகவாழ்வினர் பலரைச் சந்திக்கிறோம்.

மனத்தினால் துறவாது, துறவை, வாழ்க்கையின் வாயிலாகக் கருதி மேற்கொண்டோர் பலரும் இரவலர் களாக, ஆங்காங்கு திரிவதைப் பார்க்கின்றோம். துறவி இரக்க மாட்டான். - -

துறவி, இரவலன் ஆதல், இடும்பைக்கு வழிவகுக்கும். உடல் கட்டுக்கோப்புடையவன் அந்தப் பெயரைச் சொல்லி அழைக்காமல் ஏய்த்து வாழ்ந்தாலும் இரத்தலோடொக்கும் ஆனால் இத்தகையோரை இரவலர் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

. நல்லுழின்மையின் காரணத்தாலோ, அல்லது இயற்கையின் கொடுமையினாலோ உடற்குறையுடையரா விருப்போரே இரவலர் ஆவர். அவர் தமக்குங்கூட என்றும் இரந்து வாழ்தல் ஏற்ற நெறியன்று.

இரத்தல், வாழ்க்கைக்காக அன்று. வாழ்க்கையை வகைபட நடத்துவதற்குரிய முதலை இரத்தலே இரத்த லாகும். பின் அம் முதலைக் கொண்டு இயன்ற தொழில் செய்து முதலை உண்ணாது, வருவாயை உண்டு மகிழ்ந்து வாழ்தலே ஏற்ற முறை. இந்த அடிப்படையில் இரப்பவரா விருப்பவர்க்கு உற்றுழி உதவுவதும் மனையறத்தார்க்கு உரிய மாண்புள்ள கடமை.

இங்ங்னம் பலருக்கும் துணை நின்று வாழச் செய்து வாழ்தலே, இயல்புடைய இல்லறம் என்றார் வள்ளுவர். இன்றோ, பலருக்கு பால்வேறுபட்ட இருவர்கூடி, ஒரு விட்டில் உண்டு உடுத்தி வாழ்ந்து, மக்களைப் பெருக்கி வாழ்தலே மனையறம் என்றாகிவிட்டது. அதனாலேதான்் துன்பம் சூழ்ந்து வருத்துகிறது. வள்ளுவம் காணும் மனையறம் வையகத்தில் மலர்ந்தால் துன்பம் நீங்கும்; இன்பம் பொங்கும்.

வளர்க வையகம். வாழ்க உலகெலாம்.