குறுந்தொகை 381 முதல் 400 முடிய
387
தொகுபாடலைப் பாடியவர் கங்குல் வெள்ளத்தார்.
பாடல் தரும் செய்தி
தொகு- தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் கவலை.
- எல் என்னும் பகலொளி கழிகிறது. முல்லைப்பூ மலர்கிறது. கதிரவனின் வெப்பம் தணிகிறது. நான் கை என்னும் துணைவலிமைமை அற்றுப்போய்த் தனிமையில் துன்பம் என்னும் வெள்ளத்தில் உயிர் என்னும் கரையைப் பற்ற நீந்திக்கொண்டிருக்கிறேன். ஏனோ தெரியவில்லை. வாழி தோழி! கங்குல் என்னும் வெள்ளம் கடலைக் காட்டிலும் பெரிதாக உள்ளது. - இவ்வாறு தலைவி தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.
பாடல்
தொகுஎல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.