குறுந்தொகை
இப்படைப்பு இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. தங்களால் முடிந்தால் இப்படைப்பை முழுமை செய்ய உதவுங்கள். மேலும் உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். (உதவி) |
குறுந்தொகை கடவுள் வாழ்த்து (தாமரை)
தொகு- தாமரை புரையும் காமர் சேவடிப்
- பவளத் தன்ன மேனித் திகழொளிக்
- குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
- நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேல்
- சேவலங் கொடியோன் காப்ப
- ஏமம் வைக லெய்தின்ற லுலகே
- பாரதம் பாடிய பெருந்தேவனார்.
(;அருஞ்சொற் பொருள்: புரையும்= ஒப்பான; காமர்= அழகு; குன்றி=குன்றிமணி; ஏய்க்கும்= ஒக்கும்/ஒத்த; உடுக்கை= ஆடை, உடுப்பது உடுக்கை; குன்று= கிரௌஞ்சம் எனும்மலை; பக= பிளக்கும்படியாக; ஏமம்= பாதுகாப்பு; எய்தின்றல்= எய்தியது, அடைந்தது.)
செய்தி
தொகுஇது குறுந்தொகையைத் தொகுத்தவர் பாடிய பாடல். இந்தப் பாடலில் முருகப் பெருமான் வாழ்த்தப்படுகிறார். அவனது திருவடிகள் தாமரை போன்றவை. யாவரும் விரும்பும் தன்மை உடையவை. அவனது மேனி பவளம் போன்றது. அதில் குன்றிமணி போல் சிவந்த ஆடை அணிந்துள்ளான். வலக்கையில் கிரவுஞ்சம் என்னும் குன்றின் நெஞ்சு பிளக்க எறிந்ததும், அழகுச்சுடர் வீசுவதுமான நீண்ட வேலை உடையவன். இடக்கையில் சேவல் அணிசெய்யும் கொடியை உடையவன். அவன் காப்பதால் இந்த உலகம் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பைப் பெறுகிறது.
சிறப்பு: இப்பாடலில் செம்மேனி எம்மானாக முருகப்பெருமான் குறிக்கப்படுகின்றார். சிவந்த தாமரை போன்ற திருவடிகள்; சிவந்த பவளம் போன்ற மேனி; சிவந்த குன்றிமணிபோன்ற ஆடை; சிவந்த ரத்தம் தோய்ந்த சுடர்நெடுவேல் அசுரனின் நெஞ்சைப்பிளந்ததால்!; சிவந்த நிறமுடைய சேவலை எழுதிய கொடி; இத்தகைய செம்மேனி எம்மான் என்கின்றது இப்பாடல். முருகன் சிவந்த நிறம்கொண்டவனல்லவா? புலவரின் கற்பனை அழகு போற்றத்தக்கது.சிவந்த திருவடிகள், சிவந்தமேனி, சிவப்பு ஆடை, சிவப்பான நெடுவேல், சிவந்த சேவல் இவற்றையுடைய செம்மேனி எம்மானாம் முருகன். அழகான காட்சிஓவியம்!
உள்ளடக்கம்
தொகுகுறுந்தொகை 01- 100 பாடல்கள்
தொகுகுறுந்தொகை 101- 200 பாடல்கள்
தொகு- குறுந்தொகை 101 முதல் 110 முடிய
- குறுந்தொகை 111 முதல் 120 முடிய
- குறுந்தொகை 121 முதல் 130 முடிய
- குறுந்தொகை 131 முதல் 140 முடிய
- குறுந்தொகை 141 முதல் 150 முடிய
இவற்றையும் பார்க்க
தொகு- குறுந்தொகை உரை, விக்கிநூலில்