குழந்தைச் செல்வம்/அரசே எழுந்திரு
3. அரசே எழுந்திரு
அப்பா! எழுந்திரையா!
அரசே! எழுந்திரையா!
கொக் கொக்கோ என்று,
கோழி அதோ கூவுது பார்!
1
கா கா கா என்று,
காகம் பறக்குது பார் !
கிழக்கு வெளுக்குது பார்!
கிரணம் பரவுது பார்!
2
பூ மலர்ந்த ரோஜா
புதிய மணம் வீசுது பார்!
வந்து வந்து வண்டு
வட்டம் சுழலுது பார்!
3
கறவைப் பசுவை அதன்
கன்று சுற்றித் துள்ளுது பார்!
பால் குடிக்க வேண்டாமோ?
பழம் தின்ன வேண்டாமோ?
4
பாடங்கள் எல்லாம்
படித்திட வேண்டாமோ?
சீக்கிரம் பள்ளிக்குச்
சென்றிட வேண்டாமோ?
5
காலையும் ஆச்சுதையா!
கண்விழித்துப் பாரையா!
அப்பா! எழுந்திரையா!
அரசே ! எழுந்திரையா!
6