குழந்தை இலக்கியம்/அறிவுரை
55. சிரிக்க வேண்டும்!
119
120
121
124
126
சிரிக்க வேண்டும் பாப்பா-நீ
சிணுங்கக் கூடாது!-படிக்கச்
சிணுங்கக் கூடாது!
விரித்து நூலைத் தூக்கிப் பிடித்து
விரைவில் வீட்டு வேலை முடித்து-
தலையைச் சீவி வாரி முடித்து,
தங்கச் சிலைபோல் பள்ளி அடுத்து,
விலையில் கல்வி கற்று முடித்து,
வீட்டுக் கடங்கி நடக்க வேண்டும்!
பெற்றோர் சொல்லைக் கேட்க வேண்டும்!
பெரியோர் சொல்லைக் கேட்க வேண்டும்!
கற்றோர் உன்னைக் கண்டால்
வாரிக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும்!-
தம்பி! உனக்கொன்று சொல்வேன்;-நன்றாய்ச்
சாப்பிட்டு விளையாடி வலிவெய்திக் கொள்ளு!
தெம்பான உடற்கூட்டி னுள்ளே-போற்றும்
சிறப்பான அறிவுண்டு சோம்பலைத் தள்ளு! 1
உன்மொழி தனித்தமிழ் ஆகும்!-அதை
உயர்த்திப் பிறமொழி நீக்கிடல் வேண்டும்!
உன்னாடு செந்தமிழ் நாடு!-அதை
உடன்பெற நாடோறும் ஆவன தேடு!2
பஞ்சம் பசிப்பிணி போக்க-மற்றும்
பலசாதி மதக்கேடு யாவையும் நீக்கக்
கொஞ்சமும் நீயஞ்ச வேண்டாம்!-இந்தக்
கொடுமைகள் அற்றாலே ஒற்றுமை உண்டாம்! 3
நாட்டிற் செழுமை குலுங்க-மக்கள்
நல்லற மாண்பினில் நாளு மிலங்க
விடெலாம் தொழில்செய வேண்டும்!-இதை
விளையாடும் போதெல்லாம். நீஎண்ண வேண்டும்! 4
உன்றன் வேலை முதல்வேலை
உன்தாய் தந்தை சொற்கேட்டல்!
உன்றன் வேலை முதல்வேலை
உற்றார் ஊரார் நேசித்தல்!
உன்றன் வேலை முதல்வேலை
ஒளிகண் டெழுதல்; உடல்குளித்தல்!
உன்றன் வேலை முதல்வேலை
உணவுண் டெழுதல்; தலைவாரல்!
உன்றன் வேலை முதல்வேலை
தூய ஆடை உடுப்பதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
ஒழுங்காய் நூலை எடுப்பதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
பள்ளிக்(கு) ஒடிப் படிப்பதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
கணக்கர் உரைசெவி மடுப்பதுவே!4
உன்றன் வேலை முதல்வேலை
ஒப்பாய்க் கற்றுத் தெளிவதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
ஊருக் குழைத்து வாழ்வதுவே!5
உன்றன் வேலை முதல்வேலை
ஒண்பொருள் தேட முனைவதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
ஒக்க உண்டு வாழ்வதுவே!6
உன்றன் வேலை முதல்வேலை
அன்னை தந்தைக் குதவுவதே!
உன்றன் வேலை முதல்வேலை
உற்றார் ஊரார்த் தாங்குவதே!7
உன்றன் வேலை முதல்வேலை
உண்மை ஒளிக்கா திருப்பதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
ஒழுக்கம் உயிராய் ஓம்புவதே!8
உன்றன் வேலை முதல்வேலை
ஊரைத் திருத்த முயலுவதே!
உன்றன் வேலை முதல்வேலை
ஊரை வாழ வைப்பதுவே! 9
உன்றன் வேலை முதல்வேலை
உன்தாய் மொழியைக் காப்பதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
உன்தாய் நாட்டைக் காப்பதுவே! 10
தொழிலைப் போற்ற வேண்டும்!
தொழிலைப் போற்ற வேண்டும்!
தொழிலில் இழிவே இல்லை!
சோம்பி வாழ்ந்தால் தொல்லை! 1
ஏரைப் பூட்டி உழுதே
மழையில் லாமல் அழுதே
காரை விளைத்தல் யார்க்காம்?
கண்ணே மணியே! ஊர்க்காம்! 2
கல்லை உடைத்து வைத்தே
கடைகால் சுவரும் எடுத்தே
இல்லம் சமைத்தல் யார்க்காம்?
எழிலோ வியமே! ஊர்க்காம்! 3
தட்டித் தட்டி அறுத்தே
சமனாய்ப் பலகை இழைத்தே
பெட்டி செய்தல் யார்க்காம்?
பிள்ளைக் கனியே! ஊர்க்காம்! 4
ஆணி செய்தல் யார்க்காம் ?
அணியும் செய்தல் யார்க்காம் ?
கோணி நெய்தல் யார்க்காம் ?
குத்து விளக்கே! ஊர்க்காம்! 5
பொய்யும் சொல்லக் கூடாது!-தம்பி!
பொய்யும் சொல்லக் கூடாது!
மெய்யும் சொல்லக் கூடாது!-தம்பி!
மெய்யும் சொல்லக் கூடாது! 1
பொய்யும் மெய்யும் நன்மை தீமை
பொறுத்துக் கூற வேண்டும்!
வையம் சிறக்கும் வழியி துதான்!
மனத்தில் நிறுத்த வேண்டும்! 2
உயிரைக் காக்க அறிந்தும் பொய்யை
உரைத்தால் என்ன தப்பு?
உயர்வி ழந்தோம் என்று மெய்யை
உதறு வதோ செப்பு? 3
மெய்யும் பொய்யும் நெருப்புச் சட்டி!
விழிப்பு மிகவே வேண்டும்!
மெய்யும் பொய்யும் இல்லா விட்டால்
வெற்றி யேது யாண்டும்? 4