கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/என்ன மூட்டை?
60. என்ன மூட்டை ?
ஒரு மேசையின் மேல் பல (பொட்டலங்கள்) சிறு மூட்டைகள் கட்டி வரிசையாக, வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதற்குப் பிறகு வரிசையாக வந்து ஒவ்வொருவரும் மூட்டைகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே (10 வினாடிகளுக்குள்) தங்களுடைய இடங்களுக்குச் சென்று அமர்ந்து விட்ட பிறகு, தொட்டுப் பார்த்தவைகளை நினைவுக்குக் கொண்டு வந்து, மூட்டைகளுக்குள் உள்ளது என்ன என்பதை எழுதித் தருதல் வேண்டும்.
பட்டியலில் எழுதியுள்ளவைகளில் அதிக அளவு சரியாக உள்ளவற்றை எழுதியவரே, விளையாட்டில் வெற்றி பெறுகின்றார்.
குறிப்பு:
சிறிய மூட்டையாகக் கட்ட உப்பு, சலவை சோடா, சர்க்கரை, மிளகு, அரிசி, கோதுமை, தேயிலைத் தூள், காப்பித் தூள், சீயக்காய்த் தூள், கம்பு, கேழ்வரகு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.