கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/கண்கட்டி வேலை
53. கண்கட்டி வேலை
வகுப்பிலே எல்லோரையும் சுவர் ஓரமாக நிற்கச் செய்யவேண்டும். வகுப்பின் எதிர்ப்புறமுள்ள சுவர்ப் புறத்தின் மையத்தில், (கைக்குட்டையால்) ஒருவரது, கண்ணைக் கட்டி நிற்கச் செய்திருக்க வேண்டும்.
கண்ணைக் கட்டிக் கொள்வதற்குமுன், யார் யார் எங்கே நிற்கின்றார் என்பதை முதலில் நன்றாகக் கவனித்துக் கொள்ளுமாறு அவருக்கு அறிவிக்க வேண்டும்.
பிறகு, அவரை, அவர் இருந்த இடத்திலேயே ஒருமுறை சுற்றி விட்டு விட்டால், அவருக்கு எந்தப் பக்கம் திரும்பி இருக்கிறோம் என்பது மறப்பதால் நினைவிழந்து போகும். பின்னர், அவரை சுவர் ஓரமாக நிற்பவர்களை நோக்கி நடந்து செல்லுமாறு கூறி, யாரையாவது அவர் தொடும்படிச் செய்யவேண்டும்.
அதற்குப்பின், அவரின் முகம், சட்டை, மற்றும் தலைமுடி இவைகளைத் தொட்டுணர்ந்து யார் என்று கூறி விட வேண்டும்.
சரியாக இருந்தால், பிடிபட்டவர் கண்களைக் கட்டிக் கொள்ளவேண்டும். இல்லையேல், சொல்லத் தவறிய அவரே, மீண்டும் சென்று, இந்த விளையாட்டை முன்போலவே தொடரவேண்டும்.